Posts

Showing posts from February, 2019

வாழ்வுரிமை

பிறந்ததும் பறக்கின்றன ,, வாழ்கையை கொண்டாட. ,,,, -  ஈசல்கள் .. Today USSR celebrates the greatest Russian leader of all times - the great LENIN on his birth. LONG LIVE "EGALATORIAN " THOUGHTS OF LENIN. please note : He got inspiration from the great American writer - Jack London,  his short story titled " THE WOLF AND THE OLD MAN ". 21.01.2019

அடங்க மறு ...,,,

பாலுவுக்கு ஒரு வருத்தம் . தனது நண்பன் குணா இருக்கும் போது அப்பா தன்னை திட்டிவிட்டார் என்று . அதுவும் ஒன்பதாவது வகுப்பின் கால் ஆண்டு தேர்வில் 25 மார்க் ஆங்கிலத்தில் வாங்கியதற்கு . அந்த நிகழ்வு நடந்து 30 வருடங்கல் கடந்து ஓடின. பாலு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றான் .குணா ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றான். பாலுவும் , குணாவும் தற்செயலாக ஒரு புத்தக கண் காட்சியில் சந்தித்து கொண்ட னர். " எப்படி இருக்கு வாழ்க்கை " "மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் ". " ஏய் என்ன சொல்ற " "ஆமாம் , உடம்புக்கு எல்லா நோயும் வந்துவிட்டது " . 'என்ன ஆச்சு ' குணா வினவ , சற்றும் எதிர் பார்க்காமல் பேச ஆரம்பித்தான் பாலு , பிடித்த தொழிலை விட்டு , கிடைத்த தொழிலுக்கு சென்றால் விளைவு என் மாதிரி தான் இருக்கும் . சுருக்கமாக சொன்னால் , மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் . என் அப்பா மாட்டு தொழுவம் கட்டி 2O மாடுகளை வளர்த்தார் . அவரிடம் உண்மை இருந்தது . உழைத்தார் உயர்ந்தார் . படித்த என்னை , மதித்தார் . ஆனால் என் எண்ண

அழைக்கிறது ., ஆன்மீகம்..,,,

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , தாராசுரம் அருகே , தாராசுரம் வழி பட்டீஸ்வரம் கோயிலுக்கு போகும் முகப்பில் ஐராதீஸ்வரர் கோயில் பின்புறம் அமைந்து உள்ளது அருள்மிகு பத்ர காளி அம்மன் உடனுறை அருள்மிகு வீர பத்திரர் திருக்கோயில் . இந்த திருத்தளம் குடந்தையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது . நான் நடை பழக்கமாக தினமும் ஐரா தீஸ்வரர் கோயிலுக்கு செல்லுவது வழக்கம் , அவ்வாறு செல்லும் பொழுது இந்த கோயிலை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறேன் . கோயில் பழமையானது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட்டன. பாழ் அடைந்த கோபுரம் , ஆனால் சீரடைந்து வருகிறது. இதற்கு காரண கார்த்த அங்கு வசிக்கும் ஒரு பக்தர் . அவ்வாறாக நான் , ஒரு நாள் காலை சென்ற போது , கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது . பூசாரி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார் . நான் கோயில் மூலவரை வணங்கினேன் . பிறகு பின்புறம் சென்ற போது , என்னை கூப்பிட்டு , அங்கே இருப்பது ஒட்டக்கூத்தர் சமாதி என்றும் , அவர் அங்கே சித்தமாகி இருக்கிறார் என்று கூறினார் . சித்தர் பீடம் மூலஸ்தானத்தில் இருந்து சற்று தெற்கே அமைந்து உள்ளது. சி