கனவின் வெளிச்சம்

கனா கண்டேன்!!  தோழி !!!

அவளுக்கு  இது புதிதாக இருந்தது .அந்த அனுபவம் இது வரை அவளுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை . இது என்ன , சபலமா , சஞ்சலமா , சங்கடமா .., என்ன ஒரு உபாதை .

உபாதை என்று சொல்வதை விட ஒரு உன்னத அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும் .

காரணம் , அவள் வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை . செல்லமாக வளர்ந்தவள். அப்பா தமிழ் ஆசிரியர் . அம்மா சும்மாவா . எல்லாம் அவள் தான் . ரொப்ப கெடுபிடி .

அடிக்கடி உலகம் கெட்டுப்  போய் இருக்கிறது. ஜாக்கிரதை ,ஜாக்கிரதை என்று சொல்லி பள்ளி, வீடு என்று வளர்த்தவள் .

கடைசியாக ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சைக்கு தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டார் என் அப்பா .

வேறு வழி இன்றி அப்பா அரவணைப்பில் இருந்த நான் 10 வது வகுப்பில் Co - Ed School ல் சேர்க்கப்பட்டேன்.

பல நாட்கள் கடந்தது . தோழிகள் கிடைத்தனர் .பலர் தோழனுடன் சகஜமாக பழகினர் .

எனக்கோ பயம். அதை விட கூச்சம் என்று தான் சொல்ல வேண்டும் .

அப்படி இருந்தும் சுரேஷ் மட்டும் என் 
மனதில் ,கற்பனையில் , கனவில் அடிக்கடி வருகிறான் .

அவன் அழகு இல்லை .நண்பர்களுடன் பார்ப்பது அரிது . தனிமை விரும்பியோ என்ற சந்தேகம் வேறு எனக்கு.

என்னைப் பார்த்து ஒரு நாள் , உணவு இடைவெளியில் கேட்டான் ." நீங்க பக்கத்து தெரு தமிழ் ஆசிரியர் பொண்ணு தானே".

" ஆமாம் " என்றேன் .நீ ." நான் ஒரே பையன் அப்பா கிடையாது .அம்மா வீட்டு வேலை செய்து என்னை படிக்க வைக்கிறாள் " .

எனக்கு அவன் மீது பரிதாபம் ஏற்படவில்லை. ஏனெனில் , அவனிடம் அந்த வெளிப்பாடு இல்லை.

'பின் ஏன் , நான் அவனை நினைக்க வேண்டும்'

எப்படி சொல்வது …,,,,

ஒரு முறை பள்ளி கவிதைப் போட்டிக்கு நான் தயார் செய்த ஒன்றை அவனிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன் .

படித்து விட்டு திரும்ப கொடுத்தான் .அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை - தலைப்பு தவற.

என்றும் வாஞ்சையுடன்  - நான்

இதய வாசல் திறந்தது  - அவன் .

" மனம் என்பது குரங்கு அல்ல ,
மானுடத்து மகுடம் !
அதற்கு பல பார்வை உண்டு …
காதல் , கனிவு , கருணை ,
கலக்கம் , கலங்கம் , கபடம் ,
கண்ணியம் - ஆனால் ,
உன்னைப் பார்த்தவுடன் 
நான் கற்றுக் கொண்டது -
காதல் மட்டுமே !!! " 

இதை சமர்பிக்க மனசு இல்லாமல் தன் இதயத்தில் சுமந்து கொண்டு வீடு சென்றாள் - சுதா .

தொடர்புக்கு

எண்ணம்,எழுத்து ,         : செரா,



வணக்கம்  ,

செரா ,

Selvaraj r

தேதி  :08.08.2019

Comments

Popular posts from this blog

வாங்க" டீ" சாப்பிடலாம் !!!

தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய ....