Posts

Showing posts from September, 2023

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம், அளக்க முடியவில்லை; எல்லை இல்லா வாழ்வு; எதற்கு இப்படி அலைகிறது; மனமே பேதம் கொள்ளாதே; உன் குணம் எனக்கு தெரியும். உறவை , நட்பை , பழக்க, வழக்கத்தை , மாண்பை, மதிப்பை, மதி இழக்க செய்ய வல்ல, ஆற்றல் உனக்கு இருக்கிறது. என்ன செய்ய ? பாவி மனிதர்கள் நாங்கள் ! படைக்கப்பட்டோம், வளர்க்கப்பட்டோம், வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம். பார்வை எல்லாம் பறக்கின்றன. நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன். என்ன செய்ய...... இனி என்ன செய்ய முடியும்... என்ன செய்ய வேண்டும்... சொல்- உன்னிடமே கேட்கிறேன். பிறப்பு என்பது ஜனனம். தெரியாமல் நடக்கிறது. இறப்பு என்பது மரணம். தெரிந்தே நடக்கிறது. நடப்பதை நிறுத்த முடியாது. முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம். பிரிவும் இயற்கையே !! வாழ்வும் இயற்கையே!! இறப்பும் இயற்கையே!! இதில் ஏங்க என்ன இருக்கிறது ?? சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது. எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ? சுமப்பது சுவை ; அப்படியானால் எதை சுமப்பது, எதிர் காலத்தையா ? நிகழ் காலத்தையா ? இறந்த காலத்தையா? சொல் மனமே சொல் . என் மனசு எனக்கு தெரியவில்லை. என் இதயம்

இப்படித் தான் இருக்க வேண்டும்

வயது 70 ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம் .எடுத்து வாறி கட்டிய முடி .சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம்.  இடம் : ஐராதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்து கொண்டு இருந்தார்.  நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன்.  ஏதே என்னுள் மனசு தவித்துக் கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்க செய்தது . கால்கள் நிடந்தன .அவர் வெளி கோபுரத்தை பார்வையிட்டார்.மிதுவாக நடந்தார் .பிறகு பன்புறம் உள்ள விமானத்தை பார்த்து அதை கமேரவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக் கொண்டார். பிறகு ஒவ்வொறு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே 3 நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியதிற்கு உள்ளாக்கியது. அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகம் படித்துக் கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர்மானியர் என்றும் சொன்னார். நான் அவரிடம் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம்