Posts

Showing posts from January, 2024

ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!!

பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி , மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முலைக்கீரை .... முலைக்கீரை, பச்சைக்கீரை, மனத்தக்காளிக் கீரையோ, கீரை, கீரை.... இப்படி சொல்லிக் கொண்டே போகும் ஒரு வயது முதிர்ந்த பெரும் பாட்டியை தினமும் நடைப் பயணத்தில் எதிர்கொள்வது இயல்பாக அழைத்தது. அன்று 7 மணி. திரும்பும் போது அந்த கீரை அம்மாவும் நானும் ஒரு சேர நடந்து வந்தோம். ஒரு 50 அடி சென்ற பின் ஒரு வீட்டின் மதில் சுவரில் தன் கூடையை தாங்கலாக வைத்தார் . இது தான் சமயம் என்று என் விவாதத்தை தொடங்கும் முன் முதியவரிடம் இருந்து 3 கீரை கட்டை ரூ 60 கொடுத்து வாங்கிக் கொண்டேன். பாரம் குறைந்ததா என்று ஆரம்பித்தேன் ? இதில் 15 கிலோவிற்கு மேலே என் முதலாளி ஏற்றி வைத்து இருக்கிறார் !! அங்க , அங்க நின்னு சற்று இளைப்பாறி பின் என் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் ? மாத்தூர் - (இது குடந்தையில் இருந்து 5 கிலோ மீட்டர் இருக்கும்) . அங்கு உள்ள அந்த நிலக்கிழார் தன் வயலில் விளைந்த விளைச்சலை வியாபாரத்திற்காக இந்த பாட்டியிடம் கொடுத்து இருக்கிறார் என்பதை அறிந்தேன். வயது .... அது என்ன ... 60க்கு மேலத்தான் இருக்கும் .  சரி ;

இப்படியும் ஒரு நினைப்பா?

என்ன பேசுவது; எதைப் பற்றி பேசுவது; என்ன பொருளைப் பற்றி பேசுவது - ஒரே குழப்பம் !! சற்று நேரத்தில் நிதானித்துக் கொண்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்தை கேட்ப்பவர்களுக்கு தெரியாதது போல நினைத்து , அவர்களுக்கு ஒரு புது செய்தியாக ஏன் சொல்லக் கூடாது என்று நினைத்தான் அருட்செல்வன். அவனுக்கு அழைப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வந்தது. அந்த நூற்றாண்டு அரங்கில் ஒப்பந்தப் படி வரவிருக்கும் நபர் உடல் நலக்குறைவால் வர முடியவில்லை என்பதால் இவனுக்கு அழைப்பு விடுத்து உடனே தயாராக இருக்கச் சொல்லி விழா ஏற்பாடு செய்பவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தான் அவன். கார் வீட்டுக்கு முன் வந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த அண்ணா நூற்றாண்டு நூல் நிலைய வளாகத்தை அடைந்து விடுவோம். கொடுத்த தலைப்பு - " எதுவாகினும் நான் " அல்லது எந்த ஒரு சமுதாய புரிதலுக்கு உட்பட்ட தலைப்பை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர். அருள் செல்வன் :- தமிழ் முனைவர் பட்டம். தற்போது "இளைய சமுதாயம் " - தொலைக் காட்சி ஊடகத்தில் " கதை கள தேர்வு" உறுப்பினராகவும் , நிகழ்ச்ச