Posts

Showing posts from February, 2023

தனிமை X தன்னுணர்வு

 தனிமை X தன்னுணர்வு தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை. ஒரு கூட்டத்தில் , குடும்ப விழாவில், அலுவலகத்தில் , பள்ளிப் பருவத்தில் என பல வேறு சந்தர்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம் , நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி "அதிகம்" வரும். இதுவே ஒரு சந்நியாசி யின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும். காரணம் ; அவர்தம் தன்னுணர்வு நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே ஒரு மீட்சி, ஒரு அறம், ஒரு முழுமை ; தோன்றுவதை உணரலாம். அதுவே பரிபூரண வாழ்வு; இதைத்தான் "பாகவதம்" கூறுவதாக "ஜெய மோகன்" - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர்- தன் "Magnum opus " என்று அறியப்படும் "வெண்முரசில் " கூறுகிறார். எப்போது உங்கள் தனிமை தன்னிறைவு பெறும். Eg. Mahatma Gandhi, சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார்-Simple Attire - ஒரு கோமணத் துண்டு.

இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

இலக்கியம் சோறு போடுமா ???? !!!! யார் சொன்னது? யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி, ஆகச் சிறந்த நானாகி, என்னுள் உறைந்து; உண்டு; உறங்கி,உளவி,வினவி, கற்று, கண்டதை அறிந்து, அறிதலில் தெளிந்து, தெளிந்ததில் உணர்ந்து, உணர்ந்ததில் மிதந்து, மிதந்ததில் சுகந்து, சுகப்பதில் கரைந்து, கலைத்து, காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி, காட்சிகளே காலப் போக்கில், மறைந்து, மறைந்து,மறைந்து, உலவியில் கற்று, உண்மை உணர்ந்து, உணர்வில் இருந்து, மீண்டும், மீண்டும், மீண்டும், பழகி,பழகி,பழகி, பழகிக்கத்தில் உண்டான சுவை, இலக்கியம் என்று உணரும் போது, நான் அவனே !!!! அவன் எவனோ என்று இல்லாமல்; என்னுள் கரைந்த கால வெள்ளம், இலக்கியம். சோறு என்ற இலக்கியத்தில், பிச்சைக்கு இடமில்லை, எடுக்க,எடுக்க குறைவில்லாமல், கொடுத்துக்கொண்டே இருக்கும், அமுத சுரபி. அப்படியே இல்லாமல், எப்படியும் இல்லாமல், இப்படித்தான் என்று சொல்லலாம்; கொண்றவற்றை எல்லாம்; கொடுக்கும் பேராற்றல் என்கிற பரம்பொருள் இலக்கியம் என்று கொள்க. வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும் இலக்கியமே என்று என் உள்ளம் உரைக்கிறது. ஆச்சரியம் ; ஆனால் உண்மை " இப்பத்தான் உன்