கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , தாராசுரம் அருகே , தாராசுரம் வழி பட்டீஸ்வரம் கோயிலுக்கு போகும் முகப்பில் ஐராதீஸ்வரர் கோயில் பின்புறம் அமைந்து உள்ளது அருள்மிகு பத்ர காளி அம்மன் உடனுறை அருள்மிகு வீர பத்திரர் திருக்கோயில் . இந்த திருத்தளம் குடந்தையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது . நான் நடை பழக்கமாக தினமும் ஐரா தீஸ்வரர் கோயிலுக்கு செல்லுவது வழக்கம் , அவ்வாறு செல்லும் பொழுது இந்த கோயிலை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறேன் . கோயில் பழமையானது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட்டன. பாழ் அடைந்த கோபுரம் , ஆனால் சீரடைந்து வருகிறது. இதற்கு காரண கார்த்த அங்கு வசிக்கும் ஒரு பக்தர் . அவ்வாறாக நான் , ஒரு நாள் காலை சென்ற போது , கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது . பூசாரி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார் . நான் கோயில் மூலவரை வணங்கினேன் . பிறகு பின்புறம் சென்ற போது , என்னை கூப்பிட்டு , அங்கே இருப்பது ஒட்டக்கூத்தர் சமாதி என்றும் , அவர் அங்கே சித்தமாகி இருக்கிறார் என்று கூறினார் . சித்தர் பீடம் மூலஸ்தானத்தில் இருந்து சற்று தெற்கே அமைந்து உள்ளது. சி...