அடங்க மறு ...,,,


பாலுவுக்கு ஒரு வருத்தம் . தனது நண்பன் குணா இருக்கும் போது அப்பா தன்னை திட்டிவிட்டார் என்று .
அதுவும் ஒன்பதாவது வகுப்பின் கால் ஆண்டு தேர்வில் 25 மார்க் ஆங்கிலத்தில் வாங்கியதற்கு .
அந்த நிகழ்வு நடந்து 30 வருடங்கல் கடந்து ஓடின.
பாலு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றான் .குணா ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றான்.
பாலுவும் , குணாவும் தற்செயலாக ஒரு புத்தக கண் காட்சியில் சந்தித்து கொண்ட னர்.
" எப்படி இருக்கு வாழ்க்கை "
"மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் ".
" ஏய் என்ன சொல்ற "
"ஆமாம் , உடம்புக்கு எல்லா நோயும் வந்துவிட்டது " .
'என்ன ஆச்சு ' குணா வினவ , சற்றும் எதிர் பார்க்காமல் பேச ஆரம்பித்தான் பாலு ,
பிடித்த தொழிலை விட்டு , கிடைத்த தொழிலுக்கு சென்றால் விளைவு என் மாதிரி தான் இருக்கும் .
சுருக்கமாக சொன்னால் , மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் .
என் அப்பா மாட்டு தொழுவம் கட்டி 2O மாடுகளை வளர்த்தார் . அவரிடம் உண்மை இருந்தது . உழைத்தார் உயர்ந்தார் .
படித்த என்னை , மதித்தார் . ஆனால் என் எண்ணங்களை புரிந்து கொள்ளவில்லை .
ஆனால் என்ன . சமுதாயத்தில் நான் ஒரு Retired Hurt Bank General Manager .
50 வயதில் , உடல் நலம் காரணம் காட்டி ஓய்வு பெற்றேன் .
என் அப்பாவோ , இன்று உலக புகழ் பெற்று விட்டார் .
அவர் வளர்த்த காளை , அலங்கா நல்லூர் ஜல்லி கட்டில் CAR வென்று முதல் பரிசும் பெற்றது.
அவர் மாடு வளர்ப்பை தொழிலாக செய்யாமல் , அந்த வாழ்க்கையாகவே மாறினார்.
எனக் கோ , !!!! ????அந்த கோ ,!!!!????
நண்பன் அழுதான் .
நான் சிரித்தேன் .
அப்பா என் முன்னனே தோன்றி மறைந்தார் .
--Best Regards,
Selvaraj Ramanselvaraj.raman1961@my.com---Download myMail and grab your short and cool email address @my.com!


Comments

Popular posts from this blog

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?