சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை ....
அன்று ஞாயிறு.காலை 12 மணி இருக்கும். வீட்டு வாசல் கதவின் அருகில் ஒரு கம்பிரமான நபர் நின்று கொண்டு இருந்தார். அவர் கோட்டும் , சூட்டும் அணிந்து இருந்தார். நல்ல சிகப்பு நிறம். வயது 45 வரை இருக்கலாம். வாசல் அருகில் ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது; அதன் மேற் கூறையில் சிகப்பு கலர் லயிட் எரிந்து கொண்டு இருந்தது. வீட்டிற்குள் வரலாம என்று கேட்டவரை "வாங்க" என்று சொல்லி வரவேற்றான் செல்ல துரை. குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார் அந்த நபர். மனைவி மக்கள் என்று ஒன்று திரண்டனர். முதியவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 நபர்கள், அதில் 3 குழந்தைகள். ஆக முதியவர்கள் துரையின் பெற்றோர்கள் தான் என்று முடிவுக்கு வந்தார் அந்த வெள்ளை நிற ஆசாமி. நீண்ட கவரை எடுத்தார்; அன்புதுரையிடம் கொடுத்து, எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் இருவரையும் அழைத்தார் .அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வுகள் எல்லாம் புகைப்படம் மற்றும் ஒளிப்படமாக எடுக்கப்பட்டது. சால்லைகள் செல்ல துரைக்கு போத்தப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன. மனைவி செல்லம்மாள் பூங்கொத்தை பரிசாக பெற்றாள...