சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை ....

அன்று ஞாயிறு.காலை 12 மணி இருக்கும். வீட்டு வாசல் கதவின் அருகில் ஒரு கம்பிரமான நபர் நின்று கொண்டு இருந்தார்.

அவர் கோட்டும் , சூட்டும் அணிந்து இருந்தார். நல்ல சிகப்பு நிறம். வயது 45 வரை இருக்கலாம்.

வாசல் அருகில் ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது; அதன் மேற் கூறையில் சிகப்பு கலர் லயிட் எரிந்து கொண்டு இருந்தது.

வீட்டிற்குள் வரலாம என்று கேட்டவரை "வாங்க" என்று சொல்லி வரவேற்றான் செல்ல துரை.

குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார் அந்த நபர். மனைவி மக்கள் என்று ஒன்று திரண்டனர். முதியவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 நபர்கள், அதில் 3 குழந்தைகள்.

ஆக முதியவர்கள் துரையின் பெற்றோர்கள் தான் என்று முடிவுக்கு வந்தார் அந்த வெள்ளை நிற ஆசாமி.

நீண்ட கவரை எடுத்தார்; அன்புதுரையிடம் கொடுத்து, எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பெரியவர்கள் இருவரையும் அழைத்தார் .அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் புகைப்படம் மற்றும் ஒளிப்படமாக எடுக்கப்பட்டது.

சால்லைகள் செல்ல துரைக்கு போத்தப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன. மனைவி செல்லம்மாள் பூங்கொத்தை பரிசாக பெற்றாள்.

என்ன நடக்கிறது என்று எல்லோரும் வியந்தனர்.

அவரே மேலும் சொன்னார் :-

"நான் உங்கள் மாவட்டத்தின் கலெக்டராக நாளை பொறுப்பு ஏற்க உள்ளேன். உங்கள் சேவையால் 'சின்னப்பட்டி ' கிராமம் தொடர்ந்து 10 வருடங்களாக "பசுமை கிராமம், தூய்மை கிராமம், தன்னிறைவு கிராமம் " என மாநில அளவிலும் , இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்கு உங்களுடைய அளப்பரிய உழைப்பே காரணம் என்றார்".

நாளை என் பதிவி ஏற்பு விழாவில் இந்தப் 'புகைப்படம் ' மற்றும் 'ஒளி நாட ' வெளியிட திட்டமிட்டு உள்ளேன் என்று சொன்னவுடன் எல்லோரும் சிலை ஆனார்கள்.

தெய்வம் மட்டும் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டது.

மெதுவாக கவரை எடுத்து படிக்கலானான்.
அதில் அவனுக்கு மேற்பார்வையாளராக பதிவி உயர்வு வழங்கப்பட்டு இருந்தது.

இது நாள் வரை தூய்மை காவளராக தன் பணியினை செய்தவனுக்கு நாளை செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட தொடங்கினான்.

......................................................................


Comments

Popular posts from this blog

From Robin Sharma - best selling author...

சுஜாதா எனும் எழுத்து ஆளுமை

ORAC