Posts

Showing posts with the label nature

தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய ....

எங்கள் வீட்டின் அருகே அரசலாறு பாய்ந்து ஓடுகிறது. பாய்ந்து ஓடும் - காவேரியில் தண்ணீர் திறந்து விடும் போது; மற்ற நேரங்களில் சிறு சிறு ஓடையாய் தென்படும். நீர் ஓடைகள் நீர் திட்டுகளாக மாறும். பிறகு திட்டுகளில் மணல் சுரண்டப்பட்டு பள்ளமும், படுகுழியுமாகவும் காட்சி தரும். இது நடைமுறை நிகழ்வு. இந்த நீர் திட்டுகளின் ஓரம் பாத்தி கட்டி , நாத்து நட்டு , நீர் பாட்சி , பயிரிட்டு சாகுபடியும் நிகழும். ஒரு புறம் காவேரி தாய் நெகிழியை சுமக்கிறாள் ; மறுபுறம் இருக்கும் வீடுகள், மருத்துவ மனைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்து வந்து சேரும் கழிவுகளும் காவேரியின் கிளை ஆறுகளை அலங்கரிக்கும் கண்ணீர் புக்கள் !!! யாரைச் சொல்ல ; என்ன சொல்ல ... நானும் தான் ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறேன்- எப்படி தட்டிக் கேட்பது என தெரியாமல் , இப்படி  தம்பட்டம்  அடிக்க ? கேட்டதற்கு நன்றி . எங்கள் தெரு எங்கள் தெருவை எடுத்துக்கொள்ளுங்கள் ; வரும் போதும் ,போகும் போதும் சதா சர்வ தினமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் - துப்புறவு பணியாளர்கள். மக்கும் குப்பை - இவற்றில் காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள், முட்டை ஒடுகள், காய்ந்த மலர்கள