தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய ....

எங்கள் வீட்டின் அருகே அரசலாறு பாய்ந்து ஓடுகிறது.

பாய்ந்து ஓடும் - காவேரியில் தண்ணீர் திறந்து விடும் போது; மற்ற நேரங்களில் சிறு சிறு ஓடையாய் தென்படும்.

நீர் ஓடைகள் நீர் திட்டுகளாக மாறும். பிறகு திட்டுகளில் மணல் சுரண்டப்பட்டு பள்ளமும், படுகுழியுமாகவும் காட்சி தரும்.

இது நடைமுறை நிகழ்வு.


இந்த நீர் திட்டுகளின் ஓரம் பாத்தி கட்டி , நாத்து நட்டு , நீர் பாட்சி , பயிரிட்டு சாகுபடியும் நிகழும்.

ஒரு புறம் காவேரி தாய் நெகிழியை சுமக்கிறாள் ; மறுபுறம் இருக்கும் வீடுகள், மருத்துவ மனைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்து வந்து சேரும் கழிவுகளும் காவேரியின் கிளை ஆறுகளை அலங்கரிக்கும் கண்ணீர் புக்கள் !!!


யாரைச் சொல்ல ; என்ன சொல்ல ...

நானும் தான் ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறேன்- எப்படி தட்டிக் கேட்பது என தெரியாமல் , இப்படி தம்பட்டம் அடிக்க ?


கேட்டதற்கு நன்றி .




எங்கள் தெரு


எங்கள் தெருவை எடுத்துக்கொள்ளுங்கள் ; வரும் போதும் ,போகும் போதும் சதா சர்வ தினமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் - துப்புறவு பணியாளர்கள்.

மக்கும் குப்பை - இவற்றில் காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள், முட்டை ஒடுகள், காய்ந்த மலர்கள், வாழை தோல்கள் என பல....
​மறு சுழற்சி அல்லது மக்கா குப்பை- பிளாஸ்டிக், பொருட்கள் , அலுமினியம், இரும்பு என பல...
பிரித்து இரண்டு குப்பை தொட்டியில் இடும்படி பல தடவை சொல்லியும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை.

ஏதோ நம்மை விட்டு குப்பை அகன்றுவிடுவதாக நினைக்கிறோம். ஆனால் இது மறு சுழற்சி ஆகமால் மேலும் நம் மனித சமுதாயதற்கு கேடு விளைவிக்கின்றது என்பது தெரிந்தும் யாரும் கேட்பாரில்லை.

எங்கள் தாராசுரம் காய்கறி மார்கெட் உள்ளே "திடக்கழிவு மேலாண்மை கூடம்" சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அவர்கள் செய்யும் பணி இறைப்பணி, அவர்களுக்கு என்று கோயில் கட்ட வேண்டும். அப்படி ஒரு சுத்திகரிப்பு செயலை மனிதகுலம் வாழ செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மனதார வணங்கி வந்தேன்.


திரும்பி வரும் வழியில் காய்கறி அங்காடியின் எதிர்புறம் சுமார் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசலாற்றின் கரையோரம் இருக்கும் குப்பை ( நெகிலி) எடுத்துக் கொண்டு இருந்தது என் கண்களில் இரத்தத்தை வரவழைத்து.


இது என்ன சமூகம்? ; இந்த நிலையை யார் சொல்லி புரிய வைப்பது ? இந்த படிப்பு எப்படி சாத்தியமாகும்.


சமூக அக்கறை உள்ளவர்கள் ஏன் இந்த விசயத்தில் மெத்தனம் காட்டுகிறார்கள் ?
கழிவுகளை பிரிக்காமல் விட்டால் அந்த வீட்டிற்கு தினமும் ரூ 100 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சொன்னால் திருந்த வாய்ப்பு இருக்கிறதா ?

இது மிகவும் அவசரப் பிரச்சனை. நாம் ஒவ்வொரு ஊரையும் " பள்ளிக்கரணை" யாக மாற்றினால், தமிழகத்தில் 'அகம்' இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


பயணம் - மாறியது

மும்பை மார்க்கம் தூத்துக்குடி சென்னை ரயில் 3.45 க்கு வந்து அடைந்தது.


என்ன ரமேஷ் ,வா, வா, வா, 'நீ வருவேன்னு நான் அரை மணி நேரத்துக்கு முன்பே காத்து இருக்கிறேன்.


நீ வருகிற ' தூத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ' ரயில் திங்கள் கிழமை 3.45 க்கு வரும்  , போய் அழைத்துக் கொண்டு வா என்று அண்ணன் ஏற்கனவே சொல்லி விட்டார். '


ஏதோ அப்பவுக்கு எதிர் பாராத "மீட்டிங்" இருந்ததால் இரண்டு டிக்கெட்யை Cancel செய்து நீ விரும்பியதால் உன்னை மட்டும் ஞாயிறு 10.30 காலை கும்பகோணத்தில் இருந்து ஏற்றி விட்டதையும் கூறினார்.


உன் அப்பாவும், அம்மாவும் காலை 6 மணிக்கு விமானம் மூலம் வந்து சேர்த்து விட்டனர்.


"ஏன் அவனை மட்டும் தனியே அனுப்பி விட்டாய்" என்று கேட்டதற்கு உன்னுடன் படிக்கும் சக மாணவனும் அதில் சோலாப்பூர் வரை வருவதால் உன் விருபத்திற்கு ஏற்ப டிக்கெட்டை கேன்சல் செய்யவில்லை என்றும் சொன்னதாக சித்தப்பா சொன்னது அவனை அலைக்கழிக்க செய்தது; அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆமாம் என்று சொல்லி தலையை குனிந்து கொண்டான்.


கார், ஒரு மணி நேர பிரயாணத்திற்கு பிறகு 'கார்வெஸ்ட்' என்கிற அவர்கள் வாழும் நகர் புற பகுதிக்கு வந்து அடைந்தது.


அப்பா, ஆற அமர அவனைப் பார்த்து -

" எப்படி இருந்தது பயணம்" மதியம் சாப்பிட்டாயா ; 'வா குளித்து விட்டு மாலை எல்லோரும் சத்திரபதி  சிவாஜி டெர்மினஸ் சென்று பார்த்து விட்டு வருவோம் ' என்று சொல்லி முடிப்பதற்குள் அம்மா அவனை ஆறத் தழுவினாள்.

அவன் அழுதது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

பிறகு வந்த இரண்டு நிமிடங்கள் அவன் தன் இறுப்பை உணர்வதற்குள் கால தேவனின் மடியில் சரணடைந்தான்.

"யாருக்குத் தெரியும் அவர்கள் வீட்டுச் சாமாச்சாரம்"


சுபம்.

Comments

Popular posts from this blog

வாங்க" டீ" சாப்பிடலாம் !!!