இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

யார் சொன்னது?

யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி,

ஆகச் சிறந்த நானாகி,

என்னுள் உறைந்து; உண்டு;

உறங்கி,உளவி,வினவி,

கற்று, கண்டதை அறிந்து,

அறிதலில் தெளிந்து,
தெளிந்ததில் உணர்ந்து,
உணர்ந்ததில் மிதந்து,
மிதந்ததில் சுகந்து,

சுகப்பதில் கரைந்து, கலைத்து,
காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி,
காட்சிகளே காலப் போக்கில்,
மறைந்து, மறைந்து,மறைந்து,

உலவியில் கற்று,
உண்மை உணர்ந்து,
உணர்வில் இருந்து,
மீண்டும், மீண்டும், மீண்டும்,

பழகி,பழகி,பழகி,
பழகிக்கத்தில் உண்டான சுவை,
இலக்கியம் என்று உணரும் போது,

நான் அவனே !!!!


அவன் எவனோ என்று இல்லாமல்;
என்னுள் கரைந்த கால வெள்ளம்,

இலக்கியம்.

சோறு என்ற இலக்கியத்தில்,
பிச்சைக்கு இடமில்லை,
எடுக்க,எடுக்க குறைவில்லாமல்,
கொடுத்துக்கொண்டே இருக்கும்,
அமுத சுரபி.


அப்படியே இல்லாமல்,

எப்படியும் இல்லாமல்,

இப்படித்தான் என்று சொல்லலாம்;

கொண்றவற்றை எல்லாம்;

கொடுக்கும் பேராற்றல் என்கிற

பரம்பொருள் இலக்கியம் என்று

கொள்க.


வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும்
இலக்கியமே என்று என் உள்ளம்
உரைக்கிறது.






ஆச்சரியம் ; ஆனால் உண்மை

" இப்பத்தான் உன்னைப் பற்றி பேசிக்கொண்டு. இருந்தோம் ;நீ வந்து விட்டாய் !!உனக்கு100வயது " இந்த சொல்லாடல் பல முறை நாம் சொல்லி. இருப்போம் ; அல்லது நாம் சொல்லப்பட்டு இருப்போம்- இது எப்படி சாத்தியம்.

இது எல்லாம் எப்படி நடக்குது-எனக்கு தெரியலே !

இதைத்தான் 'மைண்ட்ரீடிங் 'என்று சொல்கிறார்கள். இது எல்லோருக்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.

நாம் ஒருவரை பல முறை சந்திக்காமல் இருக்கலாம். ஒரு சினிமா தியேட்டரிலோ , ஒரு கிளப் மீட்டிங்கிலோ, ஒரு அரசியல் கூட்டத்திலோ, ஒரு முறை சந்தித்த நபரை வெகுநாள் கழித்து சந்திக்கும்போது எங்கேயோ பார்த்து இருக்கோமே இந்த நபரை என்று நமக்கு ஒரு சிந்தனை வரும்.

அதை நாம் சிந்தனையில் வைத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக விட்டுவிடுவோம்.

ஆனால் நாம் ஒரு விஷயத்திற்காக ஒருவரை சந்திக்க முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து அதில் பயணம் செய்யும்போது இந்த நிகழ்வு நடந்து இருக்கும்.

அவரும் ஏதோ ஒரு காரணமாக அந்த இடத்திற்கு வந்து இருப்பார் :- அது ஒரு பஸ் ஸ்டாப் , ரயில் நிலையம், விமாண நிலையம் ; அல்லது ஒரு கோயில், குளம், டீ கடையாக கூட இருக்கலாம்.

இதற்கு எல்லாம் பதில் தேடும்போது அது ஒன்றை உணர்த்தும்; அது தன்னுணர்வு..

அதை கண்டு கொண்டால் , பறவைப் போல் உல்லாசமாக பறக்கலாம். பறக்கும் போது விதைகளை தூவி பல விருட்சங்களை உண்டாக்கலாம்.

இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கும்போது பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளி என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த நித்ய கல்யாணமாக இருக்கும்.

அந்த கல்யாணத்தில் ஆர்ப்பாட்டம் இருக்காது; அமைதி இருக்கும்; ஆனந்தம் கைகூடும். அலைகள் வந்து போகும்; ஆனால் ஆழமான நிசப்தம் உருவாகும்.

அந்த உணர்வு நம்மை படைத்தவன் நமக்கு உணர்த்தும் உண்மை.

இது ஒரு படைப்பாளிக்கு வந்தால் அது நாவல்; புதினம்; கவிதை.

செயலில் வெளிப்பட்டால் - புரட்சி;

அமைதியாக அமைந்தால் அது ஆன்மீகம் !!!


Comments

Popular posts from this blog

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

அடங்க மறு ...,,,