எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம், அளக்க முடியவில்லை; எல்லை இல்லா வாழ்வு; எதற்கு இப்படி அலைகிறது; மனமே பேதம் கொள்ளாதே; உன் குணம் எனக்கு தெரியும். உறவை , நட்பை , பழக்க, வழக்கத்தை , மாண்பை, மதிப்பை, மதி இழக்க செய்ய வல்ல, ஆற்றல் உனக்கு இருக்கிறது. என்ன செய்ய ? பாவி மனிதர்கள் நாங்கள் ! படைக்கப்பட்டோம், வளர்க்கப்பட்டோம், வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம். பார்வை எல்லாம் பறக்கின்றன. நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன். என்ன செய்ய...... இனி என்ன செய்ய முடியும்... என்ன செய்ய வேண்டும்... சொல்- உன்னிடமே கேட்கிறேன். பிறப்பு என்பது ஜனனம். தெரியாமல் நடக்கிறது. இறப்பு என்பது மரணம். தெரிந்தே நடக்கிறது. நடப்பதை நிறுத்த முடியாது. முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம். பிரிவும் இயற்கையே !! வாழ்வும் இயற்கையே!! இறப்பும் இயற்கையே!! இதில் ஏங்க என்ன இருக்கிறது ?? சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது. எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ? சுமப்பது சுவை ; அப்படியானால் எதை சுமப்பது, எதிர் காலத்தையா ? நிகழ் காலத்தையா ? இறந்த காலத்தையா? சொல் மனமே சொல் . என் மனசு எனக்கு தெரியவில்லை. என் இதயம்
பாலுவுக்கு ஒரு வருத்தம் . தனது நண்பன் குணா இருக்கும் போது அப்பா தன்னை திட்டிவிட்டார் என்று . அதுவும் ஒன்பதாவது வகுப்பின் கால் ஆண்டு தேர்வில் 25 மார்க் ஆங்கிலத்தில் வாங்கியதற்கு . அந்த நிகழ்வு நடந்து 30 வருடங்கல் கடந்து ஓடின. பாலு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றான் .குணா ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றான். பாலுவும் , குணாவும் தற்செயலாக ஒரு புத்தக கண் காட்சியில் சந்தித்து கொண்ட னர். " எப்படி இருக்கு வாழ்க்கை " "மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் ". " ஏய் என்ன சொல்ற " "ஆமாம் , உடம்புக்கு எல்லா நோயும் வந்துவிட்டது " . 'என்ன ஆச்சு ' குணா வினவ , சற்றும் எதிர் பார்க்காமல் பேச ஆரம்பித்தான் பாலு , பிடித்த தொழிலை விட்டு , கிடைத்த தொழிலுக்கு சென்றால் விளைவு என் மாதிரி தான் இருக்கும் . சுருக்கமாக சொன்னால் , மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் . என் அப்பா மாட்டு தொழுவம் கட்டி 2O மாடுகளை வளர்த்தார் . அவரிடம் உண்மை இருந்தது . உழைத்தார் உயர்ந்தார் . படித்த என்னை , மதித்தார் . ஆனால் என் எண்ண
Comments
Post a Comment