கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப் பட்டவர்கள் யார்?




முதல் படம் - சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்பம்..

இரண்டாம் படம் - சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவில் சிற்பம்..

முதல் படத்தில் காணப்படும்  கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப் பட்டவர்கள் யார்?

நீண்ட தலைமுடி, மீசை, தாடி எல்லாம் உள்ளதே உடல் வலிமை மிக்கவர்களாக தெரியவில்லையே?

முனிவர்களான இவர்கள் செய்த தவறு என்ன?

இவர்கள் சமணர்கள் அல்ல.. 

ஆசீவக முனிவர்கள்..

இப்படி கொடூரமாக கொல்லப்பட்டது ஏன்?

ஆசீவக முனிவர் பார்ப்பனர்களின் வேதத்தையும், வேள்விகளையும் அறிவியல் நோக்கில் எதிர்த்தவர்கள்..

ஆசீவகர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிவர்கள்..

மற்கலி கோசாலர் என்பவர்தான் ஆசீவகத்தின் நிறுவனர் இவரும், மகாவீரரும், சமகாலத்தை சேர்ந்தவர்கள்..

இவரின் காலம் கி.மு.600 ஆம் நூற்றாண்டு..

புத்தர் வாழ்ந்த காலம் கிமு 500..

தமிழர்களின் இயற்கையின் தோற்றம் போன்ற அடிப்படைக் கருத்துக்களை சமணமும், புத்தமும் ஏற்றுக் கொண்டன..

இந்த மும்மத நெறிகளும், அறிவுக்கு ஒவ்வாத வேள்விகளையும் மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தின..

காலம் சுழன்றது..

1400 ஆண்டு களுக்குப் பின், 
கி.பி 900 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ, வைணவ பக்தி இயக்கத்தில் பார்ப்பனர்கள் பங்கெடுத்து, மன்னர்களின் தயவையும் பதவிகளையும் பெற்றார்கள்..

சைவ சமயத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பனர்கள் மன்னர்களின்  ஆதரவோடு, தமக்கு எதிரான பகுத்தறிவு மதம் என்பதால் ஆசீவகம், ஜைனம், புத்த மதங்களை அழித்தார்கள்..

ஆசீவக முனிவர்கள் நீண்ட கூந்தலோடும், மீசை, தாடியோடும் இருப்பவர்கள்..

ஜைனர்கள், புத்த பிக்குகள் தலையை மொட்டையடிப்பவர்கள். தாடி, மீசையையும் அகற்றி விடுவார்கள்..

இந்த வழக்கத்தை நீங்கள் இன்றும் கூட அவர்களிடத்தில் காணலாம்..

ஆசீவக முனிவர்கள், சமண குருக்கள் கழுமரத்தில் அமர வைத்து கொல்லப் பட்டார்கள்..

எண்ணெய் தடவப்பட்ட கழுமரத்தில்  அமரவைக்கப்பட்ட ஆசீவக முனிவர்கள், சமணர்கள் உடல் கீழே இறங்க...இறங்க... கழுமரத்தின் கூரிய முனை, குதம் வழியாக குடல், வயிறு, நெஞ்சைக் கிழித்து கழுத்துப் பக்கம் வெளிவரும்..

கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கும்..

வடியும் குருதி, கிழியும் சதையை காகம், கழுகுகள் கொத்தித் தின்னும் கொடூர வலி மிகுந்த கொலை இது..

கொல்லப்பட்டவர் போக எஞ்சிய ஆசீவக முனிவர்கள், மதத்தை விட்டு சித்தர் மரபை உருவாக்கினார்கள்..

18 சித்தர்கள் சாதி, நிறக் கொடுமைகளை, ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடுகளால், மக்களை மதிக்காத போக்குகளை எதிர்த்தார்கள்..

ஆசீவக முன்னோடிகளான மூன்று தலைவர்களை ஐயனார் என அழைத்து வழிபட்டார்கள் மக்கள்.. 

ஐயன் என்றால் தலைவன் என்று பொருள்..

சைவ ,வைணவ சமயமும், பார்ப்பணர்களின் வேள்வி சடங்குகளும் இணைந்து விட்டன.. 

கோவில்களில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாகப் புகுந்து கொண்டார்கள்..

அவர்களுக்கு மாதச் சம்பளம், இலவச வீடு, இலவச வரி இல்லாத நிலம் அனைத்தும் கிடைத்தன..

பார்ப்பனப் பிள்ளைகளுக்கு வேதபாடசாலை உண்டு..

அங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, தங்கும் இடம், அனைத்தையும் மன்னர்கள் வழங்கினார்கள்..

பிற்கால தமிழ் மன்னர்கள் தமிழ்ப் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பாடசாலைகளை உருவாக்கவே இல்லை..

இங்கு தோன்றி, மக்கள் செல்வாக்கைப் பெற்ற ஆசீவகம், சமணம், புத்தமதம் ஆகிய மூன்றும் அழிக்கப்பட்டன..

யார் புத்த பிக்குகளின் தலையை துண்டித்து எடுத்து வருகிறாரோ அவருக்கு 1000, பொற்காசுகள் வழங்கினான் புஷ்யமித்ரன் என்ற  வடநாட்டு அரசன்..

சமணம் ( ஜைனம்) பார்ப்பனர்களின் வேதம், சாதி அமைப்பு, வேள்வியை எதிர்ப்பதில்லை என்று  அடிமைப்பட்டு விட்டது..

ஆசீவக ஐயனார் வழிபாட்டை, குலதெய்வ வழிபாட்டை வலியுறுத்திய ஆசீவகத்தை, மக்கள்  கைவிடவில்லை..

இன்றும் கூட கிராமங்களில் பின்பற்றுகிறார்கள்..

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பிற்கால உருவம் தந்த சிவன் திருமால் கோயில்களில், பார்ப்பனர்கள் முன் மண்டியிட மறுத்த ஆசீவக முனிவர்களின் கழுமரம் ஏற்றப்பட்ட காட்சியைப் பார்க்கும் போதெல்லாம், பிராமணர்களின் சதிச் செயல்களை எண்ணி வேதனைப்பட தோன்றும், வெறுக்கத் தோன்றும்..

பகிர்வு - பொன்னுசாமி முத்தையா

Comments

Popular posts from this blog

From Robin Sharma - best selling author...

Friendship means carrying each other through no matter what.....

ORAC