ஐந்திணை இருநூற்றைம்பது நூல் வெளியீடு - இடம் YMCA. நந்தனம்.
Booksellers and Publishers Association of South India. BAPASI 2024 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ்.வயிரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது இதில் ‘குமரன் பதிப்பகம்’ எஸ்.வயிரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘நாதம் கீதம்’ எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், ‘லியோ புக்ஸ்’ ஏ.குமரன் பொருளாளராகவும், ‘வனிதா பதிப்பகம்’ பெ.மயில வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), ‘மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை’ வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), ‘முல்லை பதிப்பகம்’ மு.பழநி இணைச் செயலாளராகவும், ‘உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்’ இராம.மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ‘டைகர் புக்ஸ்’ எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நிர்வாகக் குழு (தமிழ்) உறுப்பினர...