Posts

ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!!

பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி , மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முலைக்கீரை .... முலைக்கீரை, பச்சைக்கீரை, மனத்தக்காளிக் கீரையோ, கீரை, கீரை.... இப்படி சொல்லிக் கொண்டே போகும் ஒரு வயது முதிர்ந்த பெரும் பாட்டியை தினமும் நடைப் பயணத்தில் எதிர்கொள்வது இயல்பாக அழைத்தது. அன்று 7 மணி. திரும்பும் போது அந்த கீரை அம்மாவும் நானும் ஒரு சேர நடந்து வந்தோம். ஒரு 50 அடி சென்ற பின் ஒரு வீட்டின் மதில் சுவரில் தன் கூடையை தாங்கலாக வைத்தார் . இது தான் சமயம் என்று என் விவாதத்தை தொடங்கும் முன் முதியவரிடம் இருந்து 3 கீரை கட்டை ரூ 60 கொடுத்து வாங்கிக் கொண்டேன். பாரம் குறைந்ததா என்று ஆரம்பித்தேன் ? இதில் 15 கிலோவிற்கு மேலே என் முதலாளி ஏற்றி வைத்து இருக்கிறார் !! அங்க , அங்க நின்னு சற்று இளைப்பாறி பின் என் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் ? மாத்தூர் - (இது குடந்தையில் இருந்து 5 கிலோ மீட்டர் இருக்கும்) . அங்கு உள்ள அந்த நிலக்கிழார் தன் வயலில் விளைந்த விளைச்சலை வியாபாரத்திற்காக இந்த பாட்டியிடம் கொடுத்து இருக்கிறார் என்பதை அறிந்தேன். வயது .... அது என்ன ... 60க்கு மேலத்தான் இருக்கும் .  சரி ;

இப்படியும் ஒரு நினைப்பா?

என்ன பேசுவது; எதைப் பற்றி பேசுவது; என்ன பொருளைப் பற்றி பேசுவது - ஒரே குழப்பம் !! சற்று நேரத்தில் நிதானித்துக் கொண்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்தை கேட்ப்பவர்களுக்கு தெரியாதது போல நினைத்து , அவர்களுக்கு ஒரு புது செய்தியாக ஏன் சொல்லக் கூடாது என்று நினைத்தான் அருட்செல்வன். அவனுக்கு அழைப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வந்தது. அந்த நூற்றாண்டு அரங்கில் ஒப்பந்தப் படி வரவிருக்கும் நபர் உடல் நலக்குறைவால் வர முடியவில்லை என்பதால் இவனுக்கு அழைப்பு விடுத்து உடனே தயாராக இருக்கச் சொல்லி விழா ஏற்பாடு செய்பவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தான் அவன். கார் வீட்டுக்கு முன் வந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த அண்ணா நூற்றாண்டு நூல் நிலைய வளாகத்தை அடைந்து விடுவோம். கொடுத்த தலைப்பு - " எதுவாகினும் நான் " அல்லது எந்த ஒரு சமுதாய புரிதலுக்கு உட்பட்ட தலைப்பை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர். அருள் செல்வன் :- தமிழ் முனைவர் பட்டம். தற்போது "இளைய சமுதாயம் " - தொலைக் காட்சி ஊடகத்தில் " கதை கள தேர்வு" உறுப்பினராகவும் , நிகழ்ச்ச

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம், அளக்க முடியவில்லை; எல்லை இல்லா வாழ்வு; எதற்கு இப்படி அலைகிறது; மனமே பேதம் கொள்ளாதே; உன் குணம் எனக்கு தெரியும். உறவை , நட்பை , பழக்க, வழக்கத்தை , மாண்பை, மதிப்பை, மதி இழக்க செய்ய வல்ல, ஆற்றல் உனக்கு இருக்கிறது. என்ன செய்ய ? பாவி மனிதர்கள் நாங்கள் ! படைக்கப்பட்டோம், வளர்க்கப்பட்டோம், வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம். பார்வை எல்லாம் பறக்கின்றன. நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன். என்ன செய்ய...... இனி என்ன செய்ய முடியும்... என்ன செய்ய வேண்டும்... சொல்- உன்னிடமே கேட்கிறேன். பிறப்பு என்பது ஜனனம். தெரியாமல் நடக்கிறது. இறப்பு என்பது மரணம். தெரிந்தே நடக்கிறது. நடப்பதை நிறுத்த முடியாது. முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம். பிரிவும் இயற்கையே !! வாழ்வும் இயற்கையே!! இறப்பும் இயற்கையே!! இதில் ஏங்க என்ன இருக்கிறது ?? சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது. எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ? சுமப்பது சுவை ; அப்படியானால் எதை சுமப்பது, எதிர் காலத்தையா ? நிகழ் காலத்தையா ? இறந்த காலத்தையா? சொல் மனமே சொல் . என் மனசு எனக்கு தெரியவில்லை. என் இதயம்

இப்படித் தான் இருக்க வேண்டும்

வயது 70 ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம் .எடுத்து வாறி கட்டிய முடி .சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம்.  இடம் : ஐராதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்து கொண்டு இருந்தார்.  நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன்.  ஏதே என்னுள் மனசு தவித்துக் கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்க செய்தது . கால்கள் நிடந்தன .அவர் வெளி கோபுரத்தை பார்வையிட்டார்.மிதுவாக நடந்தார் .பிறகு பன்புறம் உள்ள விமானத்தை பார்த்து அதை கமேரவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக் கொண்டார். பிறகு ஒவ்வொறு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே 3 நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியதிற்கு உள்ளாக்கியது. அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகம் படித்துக் கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர்மானியர் என்றும் சொன்னார். நான் அவரிடம் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம்

தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய ....

எங்கள் வீட்டின் அருகே அரசலாறு பாய்ந்து ஓடுகிறது. பாய்ந்து ஓடும் - காவேரியில் தண்ணீர் திறந்து விடும் போது; மற்ற நேரங்களில் சிறு சிறு ஓடையாய் தென்படும். நீர் ஓடைகள் நீர் திட்டுகளாக மாறும். பிறகு திட்டுகளில் மணல் சுரண்டப்பட்டு பள்ளமும், படுகுழியுமாகவும் காட்சி தரும். இது நடைமுறை நிகழ்வு. இந்த நீர் திட்டுகளின் ஓரம் பாத்தி கட்டி , நாத்து நட்டு , நீர் பாட்சி , பயிரிட்டு சாகுபடியும் நிகழும். ஒரு புறம் காவேரி தாய் நெகிழியை சுமக்கிறாள் ; மறுபுறம் இருக்கும் வீடுகள், மருத்துவ மனைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்து வந்து சேரும் கழிவுகளும் காவேரியின் கிளை ஆறுகளை அலங்கரிக்கும் கண்ணீர் புக்கள் !!! யாரைச் சொல்ல ; என்ன சொல்ல ... நானும் தான் ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறேன்- எப்படி தட்டிக் கேட்பது என தெரியாமல் , இப்படி  தம்பட்டம்  அடிக்க ? கேட்டதற்கு நன்றி . எங்கள் தெரு எங்கள் தெருவை எடுத்துக்கொள்ளுங்கள் ; வரும் போதும் ,போகும் போதும் சதா சர்வ தினமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் - துப்புறவு பணியாளர்கள். மக்கும் குப்பை - இவற்றில் காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள், முட்டை ஒடுகள், காய்ந்த மலர்கள

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!

வணக்கம். ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு,         குறிஞ்சி திணையில் எழுதுபவர்கள் பாலை திணையிலும்          முல்லை திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்     மருதம் திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்          நெய்தல் திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்          பாலை திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்  2 பாடல்கள் இயற்றி அனுப்பி வைக்க இறுதி நாள் 31-08-2023. தமிழில் எழுதினால் அவமானமில்லை வருமானம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நூலில் ஆசிரியராகப் பங்கெடுக்கும் பாவலர்கள் அனைவரையும் புத்தகக் காட்சி மேடையில் விலைமதிப்புள்ள ஒன்றோடு நாம் சிறப்பிக்கும் வண்ணம் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆகவே 2 பாடலா.. மரபா.. என மனம் தளராமல் தாங்கள் முழு மனதோடு பங்கேற்று வெற்றி பயணத்தில் உடன் வர ஒவ்வொருவரையும் தமிழன்போடு அழைக்கிறோம். இணையாதவர்கள் இணைய விரும்பினால் இணைந்து கொள்ளலாம். இந்த நூலில் இணையாமல், குழுவில் இருப்பவர்கள் குழுவிலிருந்து விலகாமல் குழுவில் தொடர்ந்து பயணிக்கலாம். நாம் முன்னெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் உங்களுக்கு விருப்பமான நிகழ்வுக

சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை ....

அன்று ஞாயிறு.காலை 12 மணி இருக்கும். வீட்டு வாசல் கதவின் அருகில் ஒரு கம்பிரமான நபர் நின்று கொண்டு இருந்தார். அவர் கோட்டும் , சூட்டும் அணிந்து இருந்தார். நல்ல சிகப்பு நிறம். வயது 45 வரை இருக்கலாம். வாசல் அருகில் ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது; அதன் மேற் கூறையில் சிகப்பு கலர் லயிட் எரிந்து கொண்டு இருந்தது. வீட்டிற்குள் வரலாம என்று கேட்டவரை "வாங்க" என்று சொல்லி வரவேற்றான் செல்ல துரை. குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார் அந்த நபர். மனைவி மக்கள் என்று ஒன்று திரண்டனர். முதியவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 நபர்கள், அதில் 3 குழந்தைகள். ஆக முதியவர்கள் துரையின் பெற்றோர்கள் தான் என்று முடிவுக்கு வந்தார் அந்த வெள்ளை நிற ஆசாமி. நீண்ட கவரை எடுத்தார்; அன்புதுரையிடம் கொடுத்து, எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் இருவரையும் அழைத்தார் .அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வுகள் எல்லாம் புகைப்படம் மற்றும் ஒளிப்படமாக எடுக்கப்பட்டது. சால்லைகள் செல்ல துரைக்கு போத்தப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன. மனைவி செல்லம்மாள் பூங்கொத்தை பரிசாக பெற்றாள