எனக்குள் ஒருவன் !!!

 


வாசகர்களுக்கான கேள்வி ?? 


“இலக்கியம் என்பது யாது? 


ஜெனரஞ்சகமாக எழுதுவதா ! தத்துவார்தமா?”, 


“மறைந்த சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.ஜெயகாந்தன் அவர்கள் சிறுகதை மற்றும் நாவல்களில் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. ஆனால் அவர் சுந்தர ராமசாமி போன்று கொண்டாட படவில்லையே ஏன்?”


எனக்குள் ஒருவன் !!!


“பிறப்பின் மேன்மை பிறர் மதித்து நடத்தல். பிறப்பின் உயிர்மெய் சுயமரியாதை. 

பிறப்பின் மகிமை தன் உணர்வு அடைதல். பிறப்பை ஒவ்வொரு நொடியாய் கொண்டாடுவோம். கண்டு கொள்வோம். வாழ்க வாழ்கவே!”


TABLE OF CONTENTS 


SNo      Name of the stories 


1 . இரவுகள் என்றும் கனவுகள்.


2  .இலக்கியம் "சோறு” போடுமா?


3 .கடவுளும் அவருடைய    

        பரிபூரண உலகமும்.


4.  "மனிதம் வளர 

        தமிழைக்காப்போம்"


5.   Raju and His Prejudices


6. "மூன்றாம் பிறை - முருகேஷ்.- 

        ஒரு நேர்காணல் "


7.  தனிமை x தன்னுணர்வு


8.  உலக நீதி-நியதியா? 



9."வாழ்ந்தே காட்டுவோம்"


10. கவிதை நேரம் ="அடி, அடியாய்



11.குடியை" மறந்தோம்-மனிதம் படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது.


12. ஏன் இந்த கோபம்


13.ஆச்சரியம் ஆனால் உண்மை


14.  "எல்லாம் நம் செயல்"


15. "கடவுளின் கடமை எளிதாகியது.",


16."ஆன்மீகம் அழைக்கிறது !!!


17.எனக்கு உரிமை இல்லை 7


18.  "கண்ணும் கண்ணும் மோதிக்கொண்டால் !!


19. "வந்தாள் மகாலட்சுமியே",


20.“நட்பின் பொருட்டு"," எனது முன்னுரை


21."யார் அவர்" ?


22.பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும்


23..இந்த கையேடு






1.இரவுகள் என்றும் கனவுகள்.




கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது.




யார் சொன்னது "காலத்தை கடக்க முடியாது என்று "?






நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம்.




இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது.




நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன்.




கடவுள் யார்?




கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!!






கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!!




நான் 'கவிஞர் இல்லை' கடவுளை காண என்றேன்;




தொடர்ந்தது என் இமைகள்;




கடந்தது என் கற்பனைகள்.




-இப்போது ஒரு வினவல்;




எப்படி அறிவது ?




பாட்டி- 'எனக்கான வைத்தியத்தை கொடுத்தாள்'.




தெரிதலில் தெளிதல் பெற


அறிவதில் ஆர்வம் வேண்டும்.




இந்த அறிதல் தொடர்ந்தால் "கவிஞரே கடவுள் என்றாள்".




என் "அநுபூதி " சொன்னது.




நீ படைக்கப்பட்டு இருக்கிறாய்.


உன் எழுதளும், வீழ்தளும் உன் சக படைப்பின் உழைப்பினால் அன்றி வேறு எதுவும் இல்லை.




எனவே தான் என்ற தன்னை மறந்து தமது என்ற ஏற்றுமை ஒங்க உணர்வு கொள்.




மனித உணர்வே ஆத்ம உணர்வு; ஆன்மீக உணர்வு. அன்பை அறவணை ;ஆற்றல் பெறுகும்.






உன் கடமை சித்தமாகும்.






கடவுளுக்கு நன்றிகள்.




2. இலக்கியம்  "சோறு" போடுமா?


யார் சென்னது?


யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி,


ஆகச் சிறந்த நானாகி,


என்னுள் உறைந்து; உண்டு;


உறங்கி,உளவி,வினவி,


கற்று, கண்டதை அறிந்து,


அறிதலில் தெளிந்து,

தெளிந்ததில் உணர்ந்து,

உணர்ந்ததில் மிதந்து,

மிதந்ததில் சுகந்து,


சுகப்பதில் கரைந்து, கலைத்து,

காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி,

காட்சிகளே காலப் போக்கில்,

மறைந்து, மறைந்து,மறைந்து,


உலவியில் கற்று,

உண்மை உணர்ந்து,

உணர்வில் இருந்து,

மீண்டும், மீண்டும், மீண்டும்,


பழகி,பழகி,பழகி,

பழகிக்கத்தில் உண்டான சுவை,

இலக்கியம் என்று உணரும் போது,


நான் அவனே !!!!



அவன் எவனோ என்று இல்லாமல்;

என்னுள் கரைந்த கால வெள்ளம்,


இலக்கியம்.


சோறு என்ற இலக்கியத்தில்,

பிச்சைக்கு இடமில்லை,

எடுக்க,எடுக்க குறைவில்லாமல்,

கொடுத்துக்கொண்டே இருக்கும்,

அமுத சுரபி.



அப்படியே இல்லாமல்,


எப்படியும் இல்லாமல்,


இப்படித்தான் என்று சொல்லலாம்;


கொண்றவற்றை எல்லாம்;


கொடுக்கும் பேராற்றல் என்கிற


பரம்பொருள் இலக்கியம் என்று


கொள்க.



வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும்

இலக்கியமே என்று என் உள்ளம்

உரைக்கிறது.




3.கடவுளும் அவருடைய பரிபூரண உலகமும்.


அவருடைய (utopian world) உலகத்தில் எல்லாம் நேர்மறையாகப் படைக்கப்பட்டன.


பஞ்ச பூதங்கள்.


நீர்: அது சார்ந்து நிலம், வயல், வீடு, விலங்கு, வாழ்க்கை.


நெருப்பு: அது சார்ந்து உணவு, உடைகள்.


காற்று: மரங்கள், பழங்கள், பண்பாடு, கலாச்சாரம்.


ஆகாயம்: விண்வெளி,கண்டங்கள்.



பூமி: வாழ்விடம் .




இப்படியாக படைத்து அதில் உயிர்களை நடமாடச் சொல்லி அவன் வேடிக்கை பார்க்கிறான்.


மனிதன் வளர்ச்சி அடைந்ததை நினைத்து அவனுக்கு ஒரு பெறுமிதம்.


எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து கைக்கு வந்தாகி விட்டது. ஆனால் மனிதன் "தனக்கு " -அடிமை ஆகாமல்; தன் கைக்கு அடிையாகி விட்டானே என்று.


அவன் அவனாக இருக்க முடியாது என்று ஆகி விட்டது. இனி என் கடமை மற்ற பிற உயிர்களை காப்பது.


இதற்கு ஒரே வழி போர்.


அரசாணை பிறப்பிக்கப் படுகிறது.


எல்லோரும் 24 மணி நேரமும் தன் "கைபேசியுடன் " இருங்கள்.


உங்களை நாங்கள் பராமரிக்கிறோம்.


உங்கள் வாழ்வும் வளமும் எங்கள் கையில் - உலக சுகாதார மையம்.


இன்று இந்தியாவில் 10 பேர் BF.8 என்ற virus சுமந்து இருக்கிறார்கள்.அவர்கள் இருப்பிடம் மற்றும் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்.


இந்த செய்தி கடவுளுக்கு செல்கிறது.


அது சரி , இன்னேறு செய்தி "உக் ரைன்" நாட்டில் இருந்து.


அவர்கள் கைப்பேசியில் "இருத்தல்" பற்றி சுயபுத்தி இல்லாமல் இருந்ததால் பலி எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.


எனவே என் வேலை என்று எதுவும் இல்லை.


மனிதன் அழிய மானுடமே காரணமாகி விடும்.


"நம்மை' யாரும் பழி சொல்ல மாட்டார்கள்.


ஆனால் மற்ற பிற உயிர்களை காக்க வேண்டுமே.


கவலை கடவுளையும் கடக்கத் தொடங்கியது.



ரா.செ



பின்னோட்டம்: dostoysky ன் existentialism பற்றிய புரிதல் மானுடத்தை மேம்படுத்தியது.


அவர் இறந்து 200 ஆண்டுகளுக்குள் இப்படி "இறுத்தலியலை " கருத்தியல் கேள்விக்கு உள்ளாக்கி விட்டதே!!!


உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,


என்னைச் சொல்லிக் குற்றமில்லை,


காலம் செய்த கோலமடி,


கடவுள் செய்த குற்றமடி - என்று


சொல்ல "கண்ணதாசனுக்கு" மட்டும்தான் உரிமை உண்டு.



4."மனிதம் வளர தமிழைக்காப்போம்"


சுயநலம் : என்னுல் இருக்கும் " சுயம்" தெரிகிறவரையில்.....


பொதுநலம்: சமுதாயம் என்னை பிரதிநிதியாக பார்க்க வைக்கிறது.


பணம்: வாழ வழி செய்யும்; வாழ விடாமலும் தடுக்கும்.


புகழ்:   ஏங்குகிற   வரையில்...


வெற்றி: என்னை நான் பிறருடன் பொருத்திப் பார்க்கும் வரையில்...


தோல்வி : பிறரின் இயலாமை..


மனம் : அந்த குரங்கை ரசிக்கத் தொடங்கி விட்டேன்.



அறிவு: என்னுடன் இருக்கும் சுயம்.


சுயம் + மனைவி = வாழ்க்கை


சுயம் + சமூகம் =  சேவை


சுயம் + பிள்ளைகள் = பாசம்


சுயம் + மனிதம் =    இறக்கம்


சுயம் + இயற்கை = வாழ்வியல்.



தமிழன் வாழ்வியல் பயின்றவன்.

இயற்கையை நேசித்து வாழ்ந்தவன்.

இயற்கையை வணங்குபவன், வழிபடுபவன்.


காடு சார்ந்து (குறிஞ்சி) , மலை சார்ந்து (முல்லை) , வயல் சார்ந்து ( மருதம்) , கடல் சார்ந்து (நெய்தல்) பிறகு வரட்சி சார்ந்தும் (பாலை) வாழ்த்து உலகிற்கு வாழ்வியலை கற்பித்தவன்.



தமிழ் பயில்க ; தமிழன் இந்த உலகத்தை காப்பாற்ற பிறந்த அற்புதமான பிறவி.

மனிதம் வளர தமிழை காப்போம்.


தமிழ் ஒருவனை மனிதனாக மாற்றும்.



"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்".



யாதும் ஊரே; யாவரும் கேளீர் !!!



5.Raju and His Prejudices 


நான் கிருஷ்ணன் பேசுகிறேன்.ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் 35 வருடம் பணிபுரிந்து மேலாளராக ஓய்வு பெற்று மாதம் அரை லட்சத்திற்கும் அதிகமாக ஓய்வூதிய நிதி பெற்று வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.என் மனைவி மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். 10 மாதத்தில் ஒய்வு பெற உள்ளார்.


ஆகவே எங்களுக்கு எந்த ஒரு பணப் பிரச்சனையோ , உடல் உபாதையோ இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


மேலும் கடவுள் எங்களுக்கு  ஒரு ஆண் மகனை கொடுத்து உள்ளார். அவன் இந்த வருடம் +2 வகுப்பில் தேறி உள்ளான்.


ஆனால் அதுவே எங்களுக்கு ஒரு தர்மசங்கடத்தை கொடுத்துவிட்டதாக நினைக்கிறோம். காரணம் அவனுடைய மொத்த விழுக்காடு 50% மட்டுமே !


ஆகவே நான் என் மகனை வெகு தொலைவில்  டார்ஜிலிங் கோடை  வாசல் தளத்தில் அமைந்து உள்ள பொறியியல்  படிப்பிற்கு அனுமதி பெற்று சேர்த்து விட்டேன்.


ஆனால் அவனுக்கு அதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை; ஆனால் அதை எங்களிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை; எனவே எல்லாம் நன்றாக நடப்பதாகவே நினைத்தோம்.



காலங்கள் கடந்தது. மகன் இறுதியாண்டை  முடிக்கும் தருவாயில் இருந்தான்.


என்னுடைய  மைத்துனர் மேற்கு வங்காள அரசின் , முதன்மை செயலாளராக பணிபுரிந்தார். அவரே எங்கள் மகனுக்கு பாதுகாவளர் மற்றும் ஆலோசகர் என்று சொன்னால் அது மிகை இல்லை.


ஆனால் கடந்துவந்த 3 1/2 வருட காலத்தில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே பல சண்டைகள், சச்சரவுகள் இருக்கத்தான் செய்தது.


"நாம் சமுதாய பயந்தாங்கொள்ளிகள் "

என்பது அவளுடைய குற்றச்சாட்டு. உண்மை சற்று சுடவே செய்தது. நான் அதைப் பற்றி கவலைப் படாமல் என் மனைவியை எதிர் கொண்டேன்.


"ஷீலா , இதோ பார்; கல்வி மட்டும் தான் முக்கியம்; சமுதாயம் 'நம்மை' மதிக்க கல்வி ஒரு அளவு கோல். - அதுவே முதன்மையான ஒன்று" என்று சொல்லிச் சமாளித்தேன்.


எப்படியோ , எங்களை சமாதானப்படுத்த -ராஜீ ; எங்கள் மகன் வருடத்திற்கு இரண்டு முறை வந்து போவான்.


வாழ்கையில் எந்த உரசலும் இல்லை; சலிப்பும் இல்லை; ஆனால் அர்த்தம் வேண்டும். அதுவும் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.


"அவனுடைய கிரேட் முதல் வருடத்தில் B ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து இப்போது A+ ஆக வளர்ச்சி அடைந்தது .

எங்களுக்கு பெருமிதத்தை  தந்தது என்றால் அது உண்மைதான்.


இதை கொண்டாடும் பொருட்டு நாங்கள் இருவரும் எங்கள் மகன், மற்றும் மைத்துனர் ஆகிய இருவருக்கும் ஒரு விசித்திர அதிர்ச்சியை ஏற்படுத்த யாருக்கும் சொல்லாமல் "டார்ஜிலிங்" புறப்பட்டோம்.


கல்கத்தாவில் இறங்கி ஞாயிறு இரவு தங்கினோம். எங்களுக்கு திங்கள் கிழமை '3' மணி அளவில் டிரெயின் என்பதால் காலை முதல் மதியம் வரை 'சாப்பிங் 'செய்து இருவரும் கலைப்பாற மதிய உணவை ருசிக்க தொடங்கினோம்.‌


வங்க மொழியில் நீயூஸ் ஒடிக் கொண்டு இருந்தது. நடுவிலே TVல் பிரேக்கிங் நீயூஸ் ஒன்று வந்து ஒடியது.


அந்த நீயூஸ் எங்களை திசை திருப்பியது. நிலை குழைய செய்தது, தடுமாறினோம், தத்தளித்தோம், அழுதோம், ஆனந்தத்தில் நினைந்தோம்.


ஒருவரை ஒருவர் பார்த்து பரவசம் அடைந்து கண்கள் குளமாவதைக் கண்டு யாரும் எங்களை சமாதானம் படுத்த வில்லை.


இதோ எங்கள் மகன் பேசுகிறான் - கேளுங்கள்.


ஆங்கிலம் தமிழ் ஆக்கப்படுகிறது.


"எல்லோருக்கும் வணக்கம். நான் ராஜூ - ராஜூ செல்வம். நான் தமிழன் . நான் இதழியல் 4 ஆண்டு படித்து வருகிறேன்.


நான் உண்மையில் கொடுத்து வைத்தவன்.கொடுத்தவர்கள் என் ஆசிரியர்கள் .


அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல கடமையை பட்டு இருக்கிறேன்.


இரண்டாவது என் மாமா.


இந்த வருடத்திற்கான Yuva purashkar Award எனக்கு கிடைத்து இருப்பதில் எனக்கு  அளவிலா மகிழ்ச்சி.


கோண்டுகளின் பழங்குடி வாழ்வு பற்றிய எனது ஆராய்ச்சிக்காக இந்த மதிப்புமிக்க விருதை வழங்கியதற்காக சாகித்ய அகாடமிக்கு நன்றி.



ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகள் வரையிலான பரந்த நிலப்பரப்பில் கோண்டுகள் வாழ்கின்றனர்.



அவர்கள் இணைந்து வாழ்வது காடுகள் மற்றும் இந்த பகுதிகளில் அவர்களின் உணர்வுபூர்வமான இருப்பு உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அதிக அளவில் பயனளிக்கிறது மற்றும் மிகவும் அரிதான விலங்குகள் மற்றும் தாவரங்கள் அவற்றின் காரணமாக உயிர்வாழ்கின்றன.



அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார்கள், மேலும் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட இயற்கையுடன் ஒத்திசைந்து நம் நடத்தையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


எனது மாமாவும் கல்லூரியின் முதல்வரும் எனது ஆர்வத்தை சரியான ஆர்வத்துடன் எடுத்து, எனது ஆய்வறிக்கையை சுதந்திரமாக அனுமதித்தனர், எனவே நான் அதை வழங்கினேன்.


அவர்களுக்கு முதன்மையான எனது வணக்கங்கள்.


எழுதுவதில் என் ஆர்வம் இருப்பதால், என் பெற்றோர் என்னை மன்னிக்கலாம்.



மீண்டும் ஒருமுறை நன்றி.





முடிவு.



i thank sahitya akademi for conferring this prestigious award for my research on Tribal Lives of Gonds .



Gonds inhabit vast swath of lands ranging from Andra, telengana, odhisa, madhyapradesh and parts of jharkhand as well



They cohabitation is forests and their conscious presence in these areas really benefit the eco system to a greater extent and very rare species of animals and plants are surviving because of them.



They teach us a lesson by their life and we should cultivate our behaviour in sync with nature as practised by them.



Thanks once again for the greatest movements in life.



May my parents forgive me for cheating them right,Left and centre . My uncle and my principal of the college took my interest in right earnest and allowed my thesis a free hand and therefore I presented it .


My regards to them foremost.


My parents might forgive me for not being their prodigy as my passion is WRITING .



THANKS once again .





End.




6."மூன்றாம் பிறை - முருகேஷ்.- ஒரு நேர்காணல் "



நேயர்களுக்கு வணக்கம். 'வெப் தமிழா' "யூ டியூப்" சேனனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இன்று நாம் சந்திக்க விருக்கும் "வெப் தமிழாவின் " - உங்கள் ஊர் நாயகன் " திரு மூன்றாம் பிறை - முருகேஷ்.




"சார் , உங்க பேச்சு இன்னிக்கு ரொம்ப அட்டகாசம். வெளுத்து வாங்கிவீட்டீர்கள். உங்களுடைய பேச்சைக்கேட்டு மக்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள்.என்ன கைதட்டல்கள்.



உங்கள் வாதம் நேர்த்தியாகவும் , அழகாகவும், ஏற்ற , இறக்கத்துடன் இருந்ததால் மக்கள் சிரித்து மகிழ்ந்தனர். அவர்களை சிந்திக்க முடியாத அளவிற்கு உங்களுடைய தரவுகளை எங்கிருந்து எடுத்தீர்கள்" - நான் 'பப்ளிக்' கா இருந்து பார்த்ததால் சொல்கிறேன் .



உங்களுக்கு தெரியும் என் பெயர் - 'தடால் அடி 'முருகேஷ். ஏன் என்னை தடால் அடி என்று அழைத்தார்கள் என்றால் ; முருகேஷ் என்றால் "ஆக்சன்".



எந்த ஒரு காரியத்தையும் வெட்டு ஒன்று ,துண்டு இரண்டு என்று பார்ப்பவன்.



இதன் மூலம் " பப்ளிக்" ல் நல்ல பாப்புலர் ஆனேன். தலைவர் கேட்டுக் கொண்டதின் பேரில் பெயரை சிறிது மாற்றி உள்ளேன்.



சார். நீங்க "மக்கள் சிந்தனை கட்சி" சார்பாக போட்டி இடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.


உங்களுடைய மாற்றம் தடால் அடி To முன்றாம் பிறை - கொஞ்சம் நேயர்களுக்காக.....



ok. என்னைப் பற்றி மக்களிடம் நல்ல மதிப்பும் , ஆதரவும் , செல்வாக்கும் இருப்பதைப் பார்த்து எதிர்கட்சிகள் அவதூறுகளை பரப்பிவருன்றனர்.


அதைப் பற்றி நான் கவலைப் படப் போவது இல்லை.


என்னுடைய கவலை என் தொகுதி மக்களின் குறைகளை கலைவதே...


ஒரு ஒரு உதாரணம்: கோயில், மசுதி, சர்ச் ஆகிய திருத்தலங்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள வியாபாரிகள் தங்கள் மாத வாடகை பாக்கியை சரியாக கட்டத் தவறினால் நான் சென்று அதை தீர்த்து வைப்பேன்.



இதன் மூலம் எனக்கு மதம் சார்பற்ற ஒரு முகம் பொது வெளியில் உண்டு.

ஆகவே என் பெயரை மூன்றாம் பிறை என்று மாற்றிக் கொண்டேன்.

நன்றி.



சட்டம் , ஒழுங்கு இதை கையில் எடுப்பது முறையா ?


சட்டம் ஒழுங்கு எல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் ஊருக்கு ஏதாவது நன்மை செய்யனும். மற்றவற்றை என் தலைவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.



தோழர்கள் படை சூழ - 'மூன்றாம் பிறை' ஒளிக்கிற்றாக பறந்து மறைந்து சென்றது.



நண்பர்களே ! இந்த பேட்டி உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறோம்.


நீங்கள் போகும் முன் எங்கள் web Thamila வை Subscribe செய்யவும்.



அப்படியே அங்கே உள்ள Bell Icon யை சொடுக்கவும்.



உன்னைச் சொல்லிக் குற்றமில்லை;

என்னைச் சொல்லிக் குற்றமில்லை;

இது காலம் செய்த குற்ற மடி,

கடவுள் செய்த குற்ற மடி.



இங்கே எல்லாம் வியாபாரம்.


7. தனிமை X தன்னுணர்வு


தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை.


ஒரு கூட்டத்தில் , குடும்ப விழாவில், அலுவலகத்தில் , பள்ளிப் பருவத்தில் என பல வேறு சந்தர்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம்.


இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.


நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம் , நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி "அதிகம்" வரும்.


இதுவே ஒரு சந்நியாசி யின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும்.


காரணம் ; அவர்தம் தன்னுணர்வு



நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே


ஒரு மீட்சி,


ஒரு அறம்,


ஒரு முழுமை ;


தோன்றுவதை உணரலாம்.


அதுவே பரிபூரண வாழ்வு;

இதைத்தான் "பாகவதம்" கூறுவதாக "ஜெய மோகன்" - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர்- தன் "Magnum opus " என்று அறியப்படும் "வெண்முரசில் " கூறுகிறார்.



எப்போது உங்கள் தனிமை

தன்னிறைவு பெறும்.


Eg. Mahatma Gandhi,


சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார்-Simple Attire - ஒரு கோமணத் துண்டு.



அவர் கூறுகிறார்: " நான் காட்டில் இருந்து கொண்டு 'ஜிலேப்பிக்கு '

ஆசைப்பட்டது இல்லை. ஜலேப்பிக் கடையில் இருந்து கொண்டு ஜிலேப்பியை ஜிலேப்பியாக பார்ப்பவன்.


சாவி - எழுத்தாளர்-நவகாளியாத்திரை.


அவ்வாறாக தன் உணர்வு கொள்பவர்களுக்கு,


குடும்பத்தில்,

வாழ்க்கையில்,

சமூகத்தில்,

அலுவலகத்தில்,

நண்பர்கள், உறவுகள் மற்றும் இன்ன பிற ஜீவன்களிடமும் ஒரு "உன்னத உணர்வு மூலம் உறவு"

கொண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.


"முதுமை என்ற தனிமை " வரை காத்துக் கிடக்கத் தேவை இல்லை.



இரண்டு உதாரணங்கள்.


முதுமையிலும் இளம் துடிப்புடன் செயல் பட்ட


1.மகாத்மா காந்தி;


இளமையிலேயே தன்னை மறந்து சமூக மேம்பாட்டிற்காக காலத்தை வென்ற


2. மகாகவி பாரதி.


இதே நம் மகாகவி சொல்கிறார்.


"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள


கடலும் , மலையும் எங்கள் கூட்டம்,


நோக்கம் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை


நோக்க நோக்கக் களி யாட்டாம்".


கடலையும், மலையையும் நம் இனமாகவே பார்த்தார். பரவசம் அடைந்தார்.


இதுவே இன்று " Global warming" என்ற பட்டத்துடன் " Green-Revolution" என்ற அடைச் சொல்லுடன் ஒரு சொல்லாடலாகப்பட்டு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.


பாரதி போன்ற ஒரு கவிஞன் இனி பிறக்கப் போவது இல்லை. ஜாதி, மதம் ,இனம் ,மொழி கடந்து எல்லோரையும் நேசித்த மகாத்மாவாக பாரதி வாழ்ந்தார்.


வாழ்க்கையில் , சிந்தனையில் காந்தியத்தையும், பாரதியையும் தன் உணர்வாகக் கொண்டு செய்கிற வேலையில் முழுமை பெறுவோம்.



தனிமை என்று தனித்து ஒன்று இல்ல.


அது ஒரு மன நிலை.


இரா.செ.




As A Feed Back To The Following WhatsApp Massage



இந்த உறவுகள் அற்புதமானவை. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்; இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள். எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தால் அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று. ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.


அடுத்து, பிள்ளைகள்; பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். அதன் பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள் அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும்.



இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள். இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.



அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்._*

💧🩸 *_இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால், இது புரியும்.



வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்.



எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! வாழ்கையை ருசியுங்கள்; அனுபவியுங்கள். காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது. அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை. நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது.



தனிமையே நம்மை கொல்லப்போகிறது.




அதுவரை, சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞ்சி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்; அது மோசமானது.



*காலங்கள் திரும்ப கிடைக்காது.*


 8.உலக நீதி-நியதியா?


'ஏம்பா ! நேசனல் ஜியோகிராபிக் சேனலில் ஒரு பெரிய எருமை மாடு, அதை 10 சிங்கங்கள் போராடி உண்ணுகிறதே? இதைப் பார்க்கும் போது பயம்மா இருக்கிறது -சிங்கம் ரொம்ப மோசம்பா !? சரிதானே'



ஏழு வயது பையன் கேள்விக்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.



அதற்காக ''யூ டியூப் " சேனலில்


 'prey vs Predator ' ஐ search செய்து எடுத்து என் மகனை முழுவதுமாக பார்க்கச் சொன்னேன்.



அதில் அங்குளம் அங்குளமாக ஆங்கிலத்தில் சதுப்புநிலம், மழை வருகை, அடர்ந்த புல் வெளிகள், பசுமையின் வரவு, எருமைகளின் அணி வகுப்பு, அவைகளின் மேய்தல் என பின்னோட்டமாக தமிழில் ஒலி நாட ஓடிக்கொண்டு இருந்தது.




திடிரெண்டு ஒரு பீடுகை, எறுமைகளின் பதற்றம் ,திக்குத் தெரியாமல் சிதறிய காட்சிகள் என்று ஓடிக்கொண்டு இருந்தது.



 அதில் ஒரு எருமை தனியாக மாட்டிக்கொள்ள, அதனை மற்ற சிங்கங்கக் கூட்டம் உண்டு உணவாவாக கொண்டது.



என் கேள்விக்கு இப்போது என் மகன் பதில் கூற ஆரம்பித்தான்,



சிங்கம் எத்தனை- 7 to 10.


எருமை  40 to 50, 


அப்போ எது ஜெயிக்கும்;


எருமை - என் ஜெயிக்கவில்லை?



அது ஒடுகிறது ; பயப்படுகிறது.



எதற்காக - உயிருக்காக,


ஏன் பயப்பட வேண்டும்?



சிங்கத்தின் பற்கள் 'கூர்மையாக இருக்கும்'-கிளித்துவிடும்.



அப்படியா ? எருமைக்கு ஒன்றும் இல்லையா?



என்ன இல்லை: இதோ பார்!



கூர்மையான கொம்புகள், முட்டி உதைத்தால் தாங்கக் கூடிய பரந்த நெற்றிகள்;



இருந்தாலும் 5 ல் 1 முறை சிங்கம் ஜெயிக்கிறது.




அப்படி ஜெயிக்கவில்லை என்றால் , சிங்கம் இறந்துவிடும். இல்லாமலே போய்விடும்.



அய்யோ பாவம் சிங்கம் !




ஆக அது உணவாகச் சாப்பிடுகிறது. "வேட்டை" என்பது விளையாட்டு அல்ல, அப்படியா ! சிந்தித்தான் - என் பையன்.



இது இயற்கையின் நீதி.



'எருமைகள் ஒன்றாக மேயும்; அதைப் பிரித்து பந்தாட சிங்கம் சூழ்ச்சி செய்யும்'.



"சூழ்ச்சி சில சமயம் பலிக்கும்."இப்படியாக நான் சொல்லிக் கொண்டு போக,



எதிரே , News7ல் ரஷ்ய உக்ரேன் போரில் இறந்தவர்களின் சடலங்கள் தெரு வீதியில் கேட்பார் அற்று கிடப்பதையும் பார்த்தான்.



அப்ப இது :-



மனிதர்கள் , விசித்திரமானவர்கள்; இயற்கையை மீறுபவர்கள். மீறித்தான் பார்ப்போம் என்று சூழ் உரைப்பவர்கள்.



இப்படித்தான் அரசர்கள், அரசுகள் தங்களை சிங்கங்களாக நினைத்து மக்களை ஆளுகின்றனர்.



அய்யோ பாவம் என்றான் என் பையன்- ஆமாம் என்றேன் நான்.





அடுத்து வருவது



சீன- தைவான் - போர் மேகம்.




"கட் "செய்தேன் நான்.



9."வாழ்ந்தே காட்டுவோம்"


இந்த உலகத்தில் எதுவும் ஒசியாகக்  கிடைக்காது. அப்படியே அது கிடைத்தாலும் அது அனுதாபத்தினால் விளைந்த அழுக்கே !


உனக்கு  எங்களை " தன் பெற்றோர்கள்" என்று சொல்லிக் கொள்வதில் பெரும் சங்கடம் இருப்பதாக உணர்கிறோம்.


நாங்கள் உன்னை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கியதை 'பெருமையாகச்' சொல்ல இந்த கடிதத்தை எழுதவில்லை.


மாறாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.


' கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் ' என உறுதியாக  உங்களுக்குச் சொல்கிறேன்.


(யோவான் 12.24)



எங்களுடையது: 1 ஏக்கர் நிலம்-3 லட்சம்;

வைப்புத் தொகை - 5 லட்சம்; வீடு மதிப்பு - 5 லட்சம்-எங்கள் உழைப்பால் சேர்ந்த சொத்துக்கள்.



இதில் எங்கள் வீட்டை " விவசாய ஆலோசனைக் கூடமாக " மாற்றி உள்ளோம். வைப்புத் தொகையில் இருந்து வரும் விட்டியைகொண்டு இந்த அமைப்பு செயல்படும். எங்கள் நிலத்தில் 3 போகமும் விளைவதற்கான முயற்சிகள் மேற்க் கொள்ளப்படும்.



எங்களுடைய ஆசை, எங்களுடைய கிராமத்தை "சுய நிறைவு பெற்ற தன்னிறைவு கிராமமாக" மாற்ற வேண்டும் என்ற நோக்கமே !!


ஆக, உன் கடிதம் கிடைத்தது. படித்தோம். அறிந்தோம். உன் விருப்பப்படி நீ அங்கேயே கல்யாணம் செய்து கொண்டு முறைப்படி வாழ எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .



ஒரு ஊர் அழகாக இருக்கிறது என்றால், அந்த ஊரில் சாக்கடை அழகாக ஓடுகிறது என்று அர்த்தம்.


இறைவன் எங்களை நன்றாக

படைத்தனன் - பாட்டாளிகளை, தொழிலாளர்களை, கூலி வேலை செய்வோர்களை , விளிம்புநிலை மக்களை - செயல்படுத்த, ஊக்கப்படுத்த.....



உண்மைகளை உறக்கச் சொல்ல,

உறைவிடத்தில் இருந்து


இரா செல்வராஜ்



குடந்தை




10. கவிதை  நேரம்

"அடி , அடியாய் "



காட்சியின் கோலங்கள்



 குழாய் அடியில் ,


குடங்கல் காத்திருக்கின்றன;


தண்ணீர் தாமதம் !



***********************


அனுபவம் கடவுள்



உணர்ந்தது இன்று ;



உணர்ந்த பின் நேற்று;


உணர துடிப்பது நாளை !!



*****************







கார்மேகங்களின் பட்டின பிரவேசம்



வாகனங்கள் அணிவகுத்து காத்து இருக்கின்றன;


வானத்தை நோக்கி,


மேம் பாலத்தில் ...........





**************







வாழ்க்கை ஒரு உண்மை சம்பவம்.




வாழவே பிறந்தோம் !!!!


வாழ்ந்தே  காட்டுவோம் ???


கேள்விகளை வேள்விகளாக  ஆக்குவோம் ;


ஆச்சிரியங்களை அனுபவங்களாகபெறுவோம்.



அனுபவத்தை ஆனந்தமாக்குவோம்.




*******************







11. 'குடியை' மறந்தோம்-மனிதம் - படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது.



'என்ன ஜெய்சங்கர் , நல்லா இருக்கியா, தீபாவளி எப்படி போனிச்சு ? நீ மட்டும்தான் அடிக்கடி என்னோடு பேசிக்கொண்டு இருக்கிறே? நமக்கு இப்போ 62 வயது ஆகுது. ரிடெய்ர் ஆகி '3 ' வருடங்கள் முடிந்துவிட்டது.பேரன்கள் பார்த்துவிட்டோம்' -வந்த காலுக்கு பதில் பேச ஆரம்பித்தேன்.



"என்னதான் இருந்தாலும், என்னாலா அந்த முதல் வகுப்பு-9 வது சேரும்போது ; ஆசிரியர் எல்லோரையும் ABCD எழுதச் சொன்னது" - மறக்கமுடியாது.


அப்பா! இப்ப நினைத்தாலும் மனசு பகீர்ங்கிறது. ஏன்னா நாங்க குடந்தையில் இருந்து 1970ல் சென்னை வந்தோம். அப்பாவிற்கு தணிக்கை

பிரிவில் வேலை.


நான் 5வது முதல் 8வது வரை அந்த கருணீகர் தெரு , வேளாச்சேரியில் படித்தேன்.


படித்தேன் என்பதைவிட விளையாடினேன் என்பதுதான் எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.



அந்த எட்வின், பஷீர், பிரபாகர், பீத்தாம்குமார் என பல நண்பர்கள். அப்போ தமிழ் ஆசிரியர் சொன்னார் :- இங்க தமிழ் பசங்களை விட கன்னட, தெலுங்கு பிள்ளைகள் தமிழில் அதிகமார்க் எடுக்குது என்று .



அன்று அது உரைக்கவில்லை.

எல்லோரும் நண்பர்கள். நண்பர்கள் இடையே என்ன

பொறாமை என்ற பெருந்தன்மை.


இப்படியாக, கோலிகுண்டு, ஐஸ் பாய், பம்பரம் எனபறந்து பறந்து விளையாடியது....அந்த வேளாச்சேரி ஏரியில் கோடையில் விளையாடிய கிரிக்கெட்-நான் ஒரு off ஸ்பின்னர் மற்றும் opening பேட்ஸ்மென்.


தெரு போட்டிகள் வெகு ஜோராக நடக்கும். ஆக எனக்கு குடந்தையும் , சென்னையும் கிராமங்களாகவே தெரிந்தது.


ஏதே , நீ அன்று பக்கத்தில் இருந்ததால், உன்னை வைத்து ஒப்பேத்தினேன் - உனக்கு நினைவுக்கு வரவில்லை போலும் அந்த ABCD ....



அது சரி , மேலும் ஒரு சம்பவம் :- அந்த கால கட்டத்தில் நான் கால் ஆண்டு தேர்வில் ஆங்கிலத்தில் 13 மார்க் எடுத்தது. அதற்கு என் தகப்பனார் 'மாடு மேய்க கூட நீ லாயக்கு இல்லை' என்று திட்டியது.


நினைவு இருக்கிறதா ? நீயும் தான் அப்போது அருகில் இருந்தாய் !!???



என்னால் இன்றும் மறக்க முடிய வில்லை.


என்ன அதையே 'சவாலாக'

கொண்டு படித்து பட்டம் பெற்று வங்கி வேலையில் தேர்வு பெற்று மேலாளராகவும் உயர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டேன்.



"அந்த நெருடல் " என்னை உயர்த்தியது. உண்மை.



ஆனால் , இன்று சிந்தித்துப் பார்க்கிறேன்.


"அந்த வார்த்தை "- 'மாடு மேய்ப்பது' அவ்வளவு கேவலமான தொழிலா?


அப்படி குடிகளாக மாடு மேய்க்காவிட்டால் நாம் வளர்ந்து இருப்போமா இப்போது.


நினைவுகள் ஓட .... வேறு விஷயத்தை பேசி நண்பனிடம் இருந்து விடைபெற்றேன்.



குறிப்பு :- எங்களுக்கு 'கார்காத்த ' என்ற குலப் பெயர் உண்டு. ஆக குடிகளை மறந்தோம் -'மறந்தார்'

என் தகப்பனார் என்று தான் சொல்லவேண்டும்.


சிறப்பு :- நாங்கள் இன்று இருக்கும் வீதி 'நாணயக்காரத் தெரு' என்று அழைக்கப்படுகிறது.


இதன் சிறப்பு , அந்த காலத்தில் சோழர்களுக்கு "நாணயங்களை" செய்து தந்த வணிகர்கள் எங்கள் குல மக்கள்.


மேலும் ஒரு சிறப்பு :- இங்கு அமைந்து உள்ள "சிவ குருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்" கடந்த 50 வருடங்களாக நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது. 50000 க்கும் மேற்பட்ட இலக்கிய, இலக்கண நூல்கள் உள்ளன. அன்பர்கள் பயன் படுத்திக்கொள்க.


12.  ஏன் இந்த கோபம்

இந்த" கோபம் மட்டும் தான் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்படியானால் கோபத்தில் பல வகைகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்தேன்.





ஆம் ! அப்படித்தான் போலும். எப்படி கோபம் இடத்திற்கு , சம்பவத்திற்கு, நிகழ்வுக்கு என மாறுபடும் என்பதை ஆராயத் தொடங்கினேன்.





இடம் , பொருள், ஏவல் என்றார்கள் நம் முன்னோர்கள்.

" இடம்" அறிந்து பேசி, பொருள்பட உரைத்து, வேண்டியதைப் பெற்றுக்கொள்ளும் பண்பு நம் தமிழர் பண்பு !



நம்முடைய கோபம் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும் பட்சத்தில், அது நம்மை பெரிதும் பாதிக்காது.





அந்த சம்பவத்தை மாற்றி அமைக்க , அல்லது கடந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.





கொஞ்சம் புத்திசாலித்தனம் மட்டும் இருந்தால் போதுமானது.





அடுத்து நிகழ்வு :-



ரொம்பவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கையாள 

வேண்டும்.





அப்படி செய்யாமல் கொஞ்சம் அவசரப் படும் போது ,

'தலை பாய்' க்கு வருவதை 'தலைக்கு' கொண்டு வந்து விடும்.



ஆக ! கோபத்தை எப்படித் தான் கையாள்வது?





'ஆள்வது' என்பது முடியாத காரியம். ஆகவே அதைக் கடக்க வேண்டும்.





அவ்வாறு 'கடக்க வேண்டும்' என்றால் ,"மனதை" கொஞ்சம் ஏமாற்றினால் போதும்.





மனதை ஏமாற்றக் கற்றுக்கொள்பவன் இந்த உலகத்தையே ஆள்வான்.





அவன் தன்னைப் போல் பிறரையும் ஏமாற்றக் கற்றுக்கொண்டு பிறகு அந்த "சூட்சமத்தில் " நின்று , திளைத்து , கடைசியாக நிதானமாக வெளியே வந்து விடுவான்.



உதாரணங்கள் - அரசியல் வாதிகள்.





ஆக நாம் வாழ நம்மை கொஞ்சம் " அசுவாசப்படுத்திக்" கொள்வோம்.



பிறரைப் பற்றி காலம் நமக்கு புரிய வைக்கும்.





அரசியல் பழக வேண்டும். படிப்பது என்பது "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது".





வாழ்க வளமுடன்-மனமே மார்க்கம்.





நன்றிகள்- என் வாழ்வு ஒரு அரசியல்.



13.  ஆச்சரியம் ; ஆனால் உண்மை


" இப்பத்தான் உன்னைப் பற்றி பேசிக்கொண்டு. இருந்தோம் ;நீ வந்து விட்டாய் !!உனக்கு100வயது " இந்த சொல்லாடல் பல முறை நாம் சொல்லி. இருப்போம் ; அல்லது நாம் சொல்லப்பட்டு இருப்போம்- இது எப்படி சாத்தியம்.


இது எல்லாம் எப்படி நடக்குது-எனக்கு தெரியலே !


இதைத்தான் 'மைண்ட்ரீடிங் 'என்று சொல்கிறார்கள். இது எல்லோருக்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.


நாம் ஒருவரை பல முறை சந்திக்காமல் இருக்கலாம். ஒரு சினிமா தியேட்டரிலோ , ஒரு கிளப் மீட்டிங்கிலோ, ஒரு அரசியல் கூட்டத்திலோ, ஒரு முறை சந்தித்த நபரை வெகுநாள் கழித்து சந்திக்கும்போது எங்கேயோ பார்த்து இருக்கோமே இந்த நபரை என்று நமக்கு ஒரு சிந்தனை வரும்.


அதை நாம் சிந்தனையில் வைத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக விட்டுவிடுவோம்.


ஆனால் நாம் ஒரு விஷயத்திற்காக ஒருவரை சந்திக்க முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து அதில் பயணம் செய்யும்போது இந்த நிகழ்வு நடந்து இருக்கும்.


அவரும் ஏதோ ஒரு காரணமாக அந்த இடத்திற்கு வந்து இருப்பார் :- அது ஒரு பஸ் ஸ்டாப் , ரயில் நிலையம், விமாண நிலையம் ; அல்லது ஒரு கோயில், குளம், டீ கடையாக கூட இருக்கலாம்.


இதற்கு எல்லாம் பதில் தேடும்போது அது ஒன்றை உணர்த்தும்; அது தன்னுணர்வு..


அதை கண்டு கொண்டால் , பறவைப் போல் உல்லாசமாக பறக்கலாம். பறக்கும் போது விதைகளை தூவி பல விருட்சங்களை உண்டாக்கலாம்.


இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கும்போது பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளி என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த நித்ய கல்யாணமாக இருக்கும்.


அந்த கல்யாணத்தில் ஆர்ப்பாட்டம் இருக்காது; அமைதி இருக்கும்; ஆனந்தம் கைகூடும். அலைகள் வந்து போகும்; ஆனால் ஆழமான நிசப்தம் உருவாகும்.


அந்த உணர்வு நம்மை படைத்தவன் நமக்கு உணர்த்தும் உண்மை.


இது ஒரு படைப்பாளிக்கு வந்தால் அது நாவல்; புதினம்; கவிதை.


செயலில் வெளிப்பட்டால் - புரட்சி;


அமைதியாக அமைந்தால் அது ஆன்மீகம் !!!




14.  எல்லாம் நம் செயல் "


சுரேஷ் நடந்து கொண்டே இருந்தான். நடப்பது அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக அல்ல, நடப்பது ஒரு கடமையாகப் பட்டது. அதுவும் குளிப்பது, உண்பது, வேலைக்கு செல்வது, மாலை வருவது, மீண்டும் உண்பது, உறங்குவது போல என்று வாடிக்கையாகி விட்டது.


ஐராதீஸ்வரர் (குடந்தை-தாராசுரம்) கோயிலை 6 முறை சுற்றுவது அவனுக்கு அவனே இட்டுக் கொண்ட கட்டளை.


''இன்று சற்று மயக்கம் வருகிறதே'' என்ற எண்ணம் உதிக்க, சற்றே இளைப்பாற உற்காந்தான்.


'சிந்தனை சிறை கைதியாக அமைதியாக இளைப்பாற முடியவில்லை. உடம்புக்கு

சுரேஷ் நடந்து கொண்டே இருந்தான். நடப்பது அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக அல்ல, நடப்பது ஒரு கடமையாகப் பட்டது. அதுவும் குளிப்பது, உண்பது, வேலைக்கு செல்வது, மாலை வருவது, மீண்டும் உண்பது, உறங்குவது போல என்று வாடிக்கையாகி விட்டது.



''இன்று சற்று மயக்கம் வருகிறதே'' என்ற எண்ணம் உதிக்க, சற்றே இளைப்பாற உற்காந்தான்.


'சிந்தனை சிறை கைதியாக அமைதியாக இளைப்பாற முடியவில்லை. உடம்புக்கு ஏதாவது இருக்குமோ, இன்றே மாலை ஆபிஸ் முடிந்தவுடன் மருத்துவரிடம் காண்பிக்கே வேண்டும்'.


சே, ஒரு வேலை ஒழுங்காக முடிக்க முடியவில்லை. என்னுடைய அடுத்த நகர்வை இந்த ஓய்வு கெடுத்துவிட்டது.


இப்படித்தான் எந்தே வேலை எடுத்துக் கொண்டாலும் ஒரு தடை என்னை வாட்டுகிறது- வாட்டுவது என்பதை விட வதைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.


"அவன் அவன் தன் காரியத்தை எப்ப படி சுலபமாக செய்து கொண்டு போகிறான். எனக்கு 'வந்ததாலும்' 'வாய்த்ததாலும் ' எந்த சந்தோஷமும் இல்லை.


முயற்சி செய்து வீட்டில் எல்லோரையும் கரிசனத்துடன், அக்கறையுடன் செயல்பட்டு அமைதியாக வாழ முனைகிறேன்."


ஏனே? கடவுள் எனக்கு அந்த பாக்கியத்தை அருளவில்லை.


எதற்கு எடுத்தாலும் குறைகாணும் - மனைவி; சந்தேகப்படும் மேனேஜர்; ஒத்துஉழைக்காத சக ஊழியர்கள்; ஆக நிம்மதிக்காக நடந்தால் என் எண்ணம் என்னை வாட்டுகிறது.


கடவுளே !! உன்னிடம் சரணாகதி அடைந்துவிடுகிறேன் ;என்னை எப்படியாவது காப்பாற்று!


கும்பிட்டுக்கொண்டே வெளி பிரகாரத்தில் தன்னை மறந்து தியானித்துக்கொண்டு நின்றான்.


தன்னை மறக்க நினைத் போது, உடல் உதரியது; தலையை வேகமாக ஆட்டினான்.


அப்போதுதான் உணர்ந்தான்-"காக்க தலையில் "மூச்சா " போய் இருப்பது.


ஆமாம். தம் "இருந்தலை" உணராமல் உணர்த்தி சென்ற காக்கையை அந்நாந்து பார்த்தான்.


பார்க்கத்தான் முடியும்.


பரவசம் அடைய பழக வேண்டும்.


பழக்கப் பட வேண்டும்.


எல்லாம் நம் செயல்!!!!!????


15."கடவுளின் கடமை எளிதாகியது.", 

கடவுளும் அவருடைய பரிபூரண உலகமும். 


அவருடைய (utopian world) உலகத்தில் எல்லாம் நேர்மறையாகப் படைக்கப்பட்டன. 


பஞ்ச பூதங்கள். 


நீர்: அது சார்ந்து நிலம், வயல், வீடு, விலங்கு, வாழ்க்கை.

 

நெருப்பு: அது சார்ந்து உணவு, உடைகள். 


காற்று: மரங்கள், பழங்கள், பண்பாடு, கலாச்சாரம். 


ஆகாயம்: விண்வெளி,கண்டங்கள். 


பூமி: வாழ்விடம் . 


இப்படியாக படைத்து அதில் உயிர்களை நடமாடச் சொல்லி அவன் வேடிக்கை பார்க்கிறான். 


மனிதன் வளர்ச்சி அடைந்ததை நினைத்து “”அவனுக்கு”” ஒரு பெறுமிதம். 


எல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து கைக்கு வந்தாகி விட்டது. ஆனால் மனிதன் “”தனக்கு “” -அடிமை ஆகாமல்; தன் கைக்கு அடிையாகி விட்டானே என்று. 


அவன் அவனாக இருக்க முடியாது என்று ஆகி விட்டது. இனி என் கடமை மற்ற பிற உயிர்களை காப்பது. 


இதற்கு ஒரே வழி போர். 


அரசாணை பிறப்பிக்கப் படுகிறது. 


எல்லோரும் 24 மணி நேரமும் தன் “”கைபேசியுடன் “” இருங்கள். 


உங்களை நாங்கள் பராமரிக்கிறேnம். 


உங்கள் வாழ்வும் வளமும் எங்கள் கையில் – உலக சுகாதார மையம். 


இன்று இந்தியாவில் 10 பேர் BF.8 என்ற virus சுமந்து இருக்கிறார்கள்.அவர்கள் இருப்பிடம் மற்றும் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள். 


இந்த செய்த கடவுளுக்கு செல்கிறது. 


அது சரி , இன்னேறு செய்தி “”உக் ரைன்”” நாட்டில் இருந்து. 


அவர்கள் கைப்பேசியில் “”இருத்தல்”” பற்றி சுயபுத்தி இல்லாமல் இருந்ததால் பலி எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது. 


எனவே என் வேலை என்று எதுவும் இல்லை. 


மனிதன் அழிய மானுடமே காரணமாகி விடும். 


“”நம்மை’ யாரும் பழி சொல்ல மாட்டார்கள். 


ஆனால் மற்ற பிற உயிர்களை காக்க வேண்டுமே. 


கவலை கடவுளையும் கடக்கத் தொடங்கியது. 


ரா.செ 


பின்னோட்டம்: dostoysky ன் existentialism  பற்றிய புரிதல் மானுடத்தை மேம்படுத்தியது. 


அவர் இறந்து 200 ஆண்டுகளுக்குள் இப்படி “”இறுத்தலியலை “” கருத்தியல் கேள்விக்கு உள்ளாக்கி விட்டதே!!! 


உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, 


என்னைச் சொல்லிக் குற்றமில்லை, 


காலம் செய்த கோலமடி, 


கடவுள் செய்த குற்றமடி – என்று 


சொல்ல “”கண்ணதாசனுக்கு”” மட்டும்தான் உரிமை உண்டு.” 


16."ஆன்மீகம் அழைக்கிறது !!! 

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , தாராசுரம் அருகே , தாராசுரம் வழி பட்டீஸ்வரம் கோயிலுக்கு போகும் முகப்பில் ஐராதீஸ்வரர் கோயில் பின்புறம் அமைந்து உள்ளது அருள்மிகு பத்ர காளி அம்மன் உடனுறை அருள்மிகு வீர பத்திரர் திருக்கோயில் . 


இந்த திருத்தளம் குடந்தையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது . 


நான் நடை பழக்கமாக தினமும் ஐரா தீஸ்வரர் கோயிலுக்கு செல்லுவது வழக்கம் , அவ்வாறு செல்லும் பொழுது இந்த கோயிலை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறேன் . 


கோயில் பழமையானது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட்டன. 


பாழ் அடைந்த கோபுரம் , ஆனால் சீரடைந்து வருகிறது. இதற்கு காரண கார்த்த அங்கு வசிக்கும் ஒரு பக்தர் . 


அவ்வாறாக நான் , ஒரு நாள் காலை சென்ற போது , கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது . 


பூசாரி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார் . நான் கோயில் மூலவரை வணங்கினேன் . பிறகு பின்புறம் சென்ற போது , என்னை கூப்பிட்டு , அங்கே இருப்பது ஒட்டக்கூத்தர் சமாதி என்றும் , அவர் அங்கே சித்தமாகி இருக்கிறார் என்று கூறினார் . 


சித்தர் பீடம் மூலஸ்தானத்தில் இருந்து சற்று தெற்கே அமைந்து உள்ளது. சித்தர் பீடத்தை சுற்றி புது சமாதி அமைத்து இருந்தார்கள் . 


கவிச்சக்ரவர்தி , இங்கே அமர்ந்து பல பாடல்களை பாடி இருக்கிறார். அதில் இந்த ஊரைப் பற்றிய குறிப்புகளும் பல உள . 


இதில் உள்ள உண்மையை என்னால் உணர முடிந்தது . கால காலமாக தமிழை வளர்த்த புலவர்களுக்கு பொற்குவியலை அரச மாமன்னர்கள் கொடையாக கொடுத்ததும் , மேலும் அருள் வாக்கு பெற்றதும் , அந்த சிந்தனையில் கிடைத்த கருவூலங்கள் நமக்கு புதுப் புது அர்த்தங்களையும் , வாழ்வியலையும் என்றென்றும் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன. 


கவியை வணங்கி சற்று முன்னோக்கி நடந்தேன் . அங்கே வடக்கே ஒரு உயர்ந்த புற்றும் , அதைச் சுற்றி ஒரு வளைவான பிரகாரமும் என்னை வரவேற்றன . 


சுற்றி வந்து அமர்ந்தேன் . தியாணம் செய்தேன். 


கடைசியாக பூசாரி நீலகண்டனிடம் ( 8680828922) உரையாடினேன் . 


அது அகஸ்தியரின் சிஸ்யர் ஸ்ரீ ரெவன சித்தர் அடக்க மாகிய இடம் என்று கூறினார் . 


பிரமிப்புடன் சென்ற எனக்கு பல கேள்விகள் எழுந்தன . எல்லாவற்றிற்கும் ஆன பதிலை அவரிடன் தேடிக் கொண்டேன். 


இந்த கோயிலைப் பற்றி என்ன எழுதுவது என்ற எண்ணம் உதித்த பொழுது என்னிடம் எந்த குறிப்பேடும் இல்லை. 


இப்படி சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதற்கு பிறகு நடந்த ஒரு சம்பவம் . 


பூசாரியை சந்தித்தேன் . உரையாடினேன் . விடை பெற்றேன் . அவர் அங்கு உள்ள கலசத்கிற்கு வர்ணம் இட பணம் தேவைப் படுகிறது என்று கூறினார் . என் மனதில் அதை உள் வாங்கிக் கொண்டேன் . 


எப்படி என் எண்ணங்களை பகிர்வது என்று நினைக்கும் பொழுது என் பார்வை விரிய வில்லை . 


ஆனால் அந்த எண்ணம் மட்டும் என் இதயத்தை சற்று உருத்திக் கொண்டே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . 


நான் பார்த்தேன் , ஆனால் புரிதல் இல்லை . 

புரிதலுக்கு தேடுதல் அவசியம் என்பது மட்டும் என் எண்ண ஓட்டமாக இருந்தது. 


ஓட்டத்தை முன் நிறுத்தினேன் . எண்ணங்கள் குவியலாகின. 


குவியலை சரி செய்தேன் . சரி செய்ததின் விளைவு நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் . 


விளைவை நோக்கிய பயணம் தொடரும் …….



17.எனக்கு உரிமை இல்லை ? 

“‘என்னதான் இருந்தாலும் நீ அப்படி சொல்லி இருக்கக் கூடாது, ரொம்ம வருத்தப்பட்டான்’. 


சொல்லி சொல்லி ஆத்துப்போறான். 


அப்படி என்ன தான் அவனை சொன்ன? 


நான் சொல்றது இருக்கட்டும், இதற்கு காரணம் தெரியாம பேசாதே!?

 

என்ன அப்படி பொல்லாத காரணமோ? 


சொல்றேன். ஆனால் சொல்றதுக்கு முன்னாடி , அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்பதை கேட்காமல் நான் சும்மா இருக்கப்போவது இல்லை. 


அப்பா! சும்மா இறு! அல்லது சும்மா இல்லா போ ; அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. 

அவன் சொல்றதைச் சொல்லி விட்டேன். இனி உன்பாடு, அவன் பாடு, எனக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லே இதுலே ? 


‘அது சரி ,சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கிறது மாதிரி, சும்மா விட மாட்டேன் உங்க ரெண்டு பேரையும் . ஞாபகம் வைத்துக்கோ’. 


டேய் ! விஷயத்துக்கு வா ! நான் நேற்று காலை வேலை விஷயமாக கீழ்பாக்கம் செல்வதற்கு  பரங்கிமலை ஸ்டேஸன் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்தேன். 


அப்போது என்னைப் பார்த்த அஸ்வின் எப்படி இருக்க என்று விசாரித்தான். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் நம்மோட படித்த தோழமைக்காக விசாரிக்கும் போது உன்னப்பற்றி பேச்சு வந்தது. 


உடனே அவன் சொன்ன ஒரு வார்த்தை “” அவனைப் பற்றி என்னிடம் பேசாதே “” 


அதற்காகத்தான் அப்படி என்ன 

சொன்ன ? அப்படி என்ன நடந்தது என்று கேட்டேன் . 


அதற்குள் ஆமா , சூமா பண்ணி விட்டான்! அஸ்வின். மேலும் ‘சென்ரல்’ செல்வதாக வருத்தப்பட்டு விலகினான் . 


அப்படி இல்லேடா ? நீ வந்தே. இப்போ ஆற, அமற பேசினோம். நல்ல  நினைவுகளை பகிர்ந்தோம். 


அந்தப் பய அப்படியா? ஒரே திமிர், நம்பிக்கை துரோகம் | பழைச எண்ணிப்பார்க்காத ஒரு பண்ணாடை. 


சேரி .நான் கிளம்புகிறேன். 


வெளியேறிய சுரேஷ் ஒரு செய்தியை உடனே அஸ்வினுக்கு அனுப்பினான். 


“”நான் குமாரை சந்தித்தேன். நல்ல உபசரிப்பு, பழைய ஞாபகங்கள், பள்ளி அனுபவங்கள், குடும்ப விஷயங்கள் என ஒருநாள் போனதே தெரியவில்லை””. 


இன்று  விடைப்பெற்று என் ஊர் கும்பகோணம் கிளம்புகிறேன். மீண்டும் சந்திப்போம். 


தெரிவதை விட, தெரியாமல் பல விஷயங்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோணுகிறது. 


முடிந்தவரை நட்டை பாராட்டு; இல்லையெனில் விட்டு விலகு. 


இப்படியாக whatsapp பண்ண உடனே அவனுக்கு Video Call வந்தது. அப்பா, ஆண்டான் அடிமை, இப்போது நீ எங்கே இருப்பே என்று எனக்கு தெரியாது. இப்போது சொல்றேன். கேள்! அவனுடன் சேராதே; அவன் ஒரு பணப் பிடுங்கி. எப்போ, எங்கே என்று பார்க்காமல் பழைய நண்பர்கள் பலரிடம் பணம் வாங்கி திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வருகிறான். 


அவனை நம்பி ஏமாராதே? எனக்கு படிப்படியா ஒரு லட்சம் வரை கொடுக்க வேண்டும். 


நல்ல வேளை நான் இப்போது என் வீட்டிற்கு செல்ல ரயில் ஏறிவிட்டேன். 


மீண்டும் கால் வந்தது.””நான் குமார் பேசுகிறேன். செய்தி வந்து இருக்கும். இப்படித்தான் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் இரண்டு லட்சம் கொடுக்க வேண்டும் என்று அனுப்பி இருப்பான். 


நம்பாதே! உண்மை என்ன வென்றால்;’ என்னைப் பற்றி நண்பர்களிடம் அவதூறு பரப்பி அதை பெரிய விஷயமாக்கி எனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவன் எண்ணம். 


ஏன் அப்படி செய்கிறான் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல். 


அஸ்வின் தன் காதல் மனைவி கல்லூரி நாட்களில் குமாரிடம் பழகியதும் அதை Social Media வில் பகிர்ந்ததும் இப்போது நண்பர்கள் மத்தியில் Viral ஆகி வருகிறது. 


அவன் ஒரு psycho ஆக மாறிவிட்டான் என்று இவன் சொல்ல , அவனைப் பற்றி இவன் ஒரு பணபித்தலாட்டம் செய்பவன் என்று விமிர்சிக்க எனக்கு ஏண்டா இவர்கள் இரண்டு பேரையும் சந்தித்தோம் என்று ஆகிவிட்டது. 


என்ன செய்ய. வாழ்க்கை பல வினோதங்களை நமக்கு புகட்டிக்கொண்டு இருக்கிறது. 


“உண்மை ,பொய்களை ஆராய எவருக்கும் உரிமை இல்லை.”


18."கண்ணும் கண்ணும் மோதிக்கொண்டால் !! 




நண்பன் கோபியிடம் இருந்து மூன்றாவது முறையாக ஷரிக்கு அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. 


‘செல்லை’ எடுத்த தேவி- “”இதோ பாருங்க உங்க நண்பருக்கு நீங்க மேனேஜராக இருக்கும் போது வீடு கட்ட உதவுனீங்க…. 


அவர் மகன் வெளிநாடு சென்று படிக்க மேலும் கடன் உதவி செய்தீங்க!… 


இப்ப , நம்ம ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கா ; ஏதாவது “”கமிட்”” பண்ணீங்க ? , நான் என் வீட்டோடு “”கமிட்”” ஆகி விடுவேன்””. 


குளித்து, சற்று ஆசுவாசமாக ‘ஸைலண்ட்’  மோடில் உள்ள போனை ஆன் செய்து பேசினான் – ஹரி. 

டேய்! எப்படி இருக்க .நான் ஓய்வு பெற்று 3 வருடம் ஆகிறது. 


அப்போது வந்தது தான் நீ; அதற்கு அப்புறம் வரவே இல்லை – கோபி;என்று என் பொண்டாட்டி ரொம்ப ஆதங்கப்படுகிறாள். 


மகளுக்கு அடுத்த மாதம் கல்யாணம் வைத்து இருக்கிறேன். அதற்கு குடும்ப சரிதமாக வந்துவிடு. 


“”அப்பா !!! ஹரி பிழைக்க கற்றுக்கொண்டார். நல்ல ராஜதந்திரம் ; உண்மையை எப்படி பக்குவமாக சொல்லித் தப்பிக்கிறார்.”” என்று மனைவி நினைப்பதை எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டு பேச்சை தொடர்ந்தான் ஹரி. 


அப்படியா , ரொம்ப சந்தோவும் !! 


இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. ஆனால் இதை நான் ஏற்றுக்கொண்டால் என் மனைவி சம்மதிக்க மாட்டாள். 


Sorry, நட்புதான் முக்கியம். 

இங்கே வரும் போது நாங்கள் வந்து பார்க்கிறோம். என்றும் எங்கள் ஆசீர்வாதம். 


கண்கள் நீண்டன; பிறகு விரிந்தன. 


என்ன என்பதற்குள் “”voice recorder’ ஒலித்தது. 


என் மகன்-கெளசிக்; உனக்கும், எனக்கும் குடும்பத்தோடு LONDON சென்று வர TICKET ஏற்பாடு செய்து உள்ளான். 


அவனுக்கு உன் மகள் கல்யாணத்திற்கு பிறகு இரண்டு மாதம் கழித்துத் தான் என்பதால் , நானும் சரி என்று சொல்லிவிட்டேன். 


உன் சம்மதம் இருக்கும் என்று நானும் உறுதி அளித்துவிட்டேன். 


இது அவன் உனக்கு செய்யும் “”கைமாறு”” அல்ல…. எனக்கு செய்யும் கடமை. 


தப்பாக நினைக்காதே ?! 


கண்களில் கண்ணீர் கரைந்து வற்றத்தொடங்கியது. 


– முற்றும்.




19."வந்தாள் மகாலட்சுமியே!", 

நான் எது செய்தாலும் அதில் ஒரு குறை கண்டு பிடிப்பதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு இருக்கிறாய். 


அப்படி எதை ஒழுங்காக செய்து முடித்தீர்கள்! 


என் தியாகங்களை பட்டியல் இட்டு பிரசங்கம் பண்ண, நான் ஒன்னும் உன் தகப்பன் மாறி அரசியல்வாதி இல்லை? 


“”பாருங்க!. இது நமக்கு இருவருக்கும் நடக்கும் குடும்ப பிரச்சனை; என் அப்பனை இழுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; அதை புரிஞ்சுக்குங்க முதல்லே”” 


சரி, அப்ப எதற்கு எடுத்தாலும் என்னைப் பற்றி குறை கூறும் போது, என் அம்மாவை இழுக்கிறாயே! அது என்ன நியாயம்? 

அதை விடுங்க . ‘எனக்கு இரண்டு லட்சம் வேணும் என்று சொல்லி ஒரு மாதம் ஆகிறது. “”உன் தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்”” என்று சொன்னீர்களே! அது என்னவாம் !? 


‘அப்படி வா; கடவுள் உங்களைப் படைக்கும்போது ஒரு சூட்சுமம் வைத்து படைத்து இருப்பார் போல’ 


அதனால் தான் எதையும் நேர்மறையாக கேட்காமல், எதிர்மறையாக சண்டையிடுகிறீர்கள்! 


போதும் உம் சம்பாசணை.என் அப்பாவுக்கு தெரிந்தால் , தூக்குபோட்டு இறந்துவிடுவார். 


அடியேய்! இதிலும் இவ்வளவு வில்லங்கமா? உதவி என்று கேட்டுவிட்டு மிரட்டி பணம் பறிக்கும் வழிப்பறி குடும்பமா ? உங்கள் குடும்பம்! என்று கூறி ரூபாய் 2.00 லட்சத்திற்கான பண வோலையை நீட்டினான். 


இதை முதலில் சொல்லி இருந்தால் இவ்வளவு சண்டை வந்து இருக்காது. 


‘வரட்டும், வரவேண்டும். வாழ்க்கை உன்னோடுதான் என்று வந்தபிறகு அதில் சலிப்பை காண்பது எனக்கு அழகு அல்ல’. 


ஏது !? அப்படியே முகம் மலர்ந்தாள்! மலர்கள் வாசத்தை மட்டும் பரப்பவில்லை. நல்ல விடியலையும் அவனுக்கு தந்தது. 


இரவுகள் வரை அது தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 


இப்படிக்கு உண்மையுடன் 


செல்வன் ராஜன்



20."நட்பின் பொருட்டு","எனது முன்னுரை 

ஒரு குடிமகனாக, நான் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. குறிப்பாக, ஒரு வங்கியாளராக இருப்பதால், சமுதாயத்திற்கு பெருமளவில் சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, இந்தியர்களாகிய நாம் உள்நோக்கிப் பார்க்க வேண்டும், எந்தவொரு சமூகத்திலும் வங்கிகள் முக்கியமான கருவிகளாக இருக்கின்றன . 

வங்கிகள் திவால்நிலையால் இரக்கமின்றி வீழ்ச்சியடைவதைக் காணமுடிகிறது. வீழ்ச்சிக்கு பின் வளர்ச்சி பாதை மிகவும் கடினமானது மற்றும் மக்கள் சோர்வடைந்து கவனத்தை இழந்துள்ளனர். 

உலகெங்கிலும் ஏராளமான சரிவுகள் காணப்பட்ட நிலையில், ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது.ஆனால் குறைக்கப்படவில்லை, பெரும்பாலும் சிறிய, நடுத்தர வர்க்க மக்களால் பராமரிக்கப்படும் வலுவான தேசிய பொருளாதாரம் மற்றும் அவர்களின் சேமிப்பு காரணமாக. 

தேசிய செலவினத்திற்கான அவர்களின் பங்களிப்புகள் ஆச்சரியமானவை ; உலகம் முழுவதும் நம்மைத் திரும்பிப் பார்க்கிறது. 

இந்தியர்களாகிய நாம் நிறைய நுகர்ந்தாலும்( அமெரிக்கர்களின் பார்வையில்) நிறைய உழைக்கிறோம்-வாழவும் பறறை வாழ வைக்கவும்; மற்ற பொருளாதாரங்கள் உயிர்வாழ அனுமதிக்கிறோம், மேலும் அவை நமது வளங்களை (கடினமாக சம்பாதித்த சேமிப்பு) நுகரும் அனுமதி செய்கிறோம். 

பாதகமான சூழ்நிலைகளில் அனுபவங்கள் எளிமையிலிருந்து செல்வத்தை உருவாக்கியுள்ளன மற்றும் சேமிப்புப் பழக்கம் நமது தற்போதைய தலைமுறையினருக்கு ஒரு எதிர்காலமாக இருக்கிறது. 

இந்தியாவில் அமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட பொருளாதாரம் உயிருடன் வைக்கப்பட்டு சர்வதேச சந்தைகளுடன் போட்டியிட உதவுகிறது. 

பெரிய அளவில் மக்களுக்கு பெரியவர்கள் தேவையில்லை. அவர்களுக்கு “உள்நுழைவு தேவை” என்னவென்றால், செய்யப்படும் வேலைக்கான வேலைவாய்ப்பு மற்றும் மறுபயன்பாடு. 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கான வங்கிகளுடன் அடிப்படை சிறு சேமிப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதில் (ஆதார் அட்டைகள் )மற்றும் திட்டத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தால் செய்யப்படும் சீரான அடையாளப் பயிற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். 

வங்கிகளில் குவிந்து வரும் செயல்படாத கணக்குகளின் சுமை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது உண்மைதான். 

அரசியல்வாதிகளின் விருப்பங்களும், ஆர்வங்களும் நமது அற்ப வளங்களை அரிக்கின்றன, ஆனால் அவை கல்வி கடன்களுக்கு நிதியளிக்க வங்கிகளை வழிநடத்த விதிகளை மிதிக்கின்றன-வாக்குகளைப் பெறுவதற்கு. 

இந்த வாக்கு வங்கி அரசியல் என்பது கல்வியை இறக்குமதி செய்யும் பெயரில் வங்கியை மோசடி செய்வதைத் தவிர வேறில்லை. எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஒழுக்கம் அவசியம் . 

இந்தியா மிகப்பெரியது, ஒருவர் அடிப்படைகளை கற்பிக்க தேவையில்லை, ஏனெனில் நம் கலாச்சாரத்தின் மதிப்புகளை சமூக, பொருளாதார மற்றும் நெறிமுறை முனைகளில் தங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் ஊக்குவிக்கும் முதல் ஆசிரியர்கள் எங்கள் பெற்றோர்கள். 

நாடு பல சுனாமிகளைத் தாங்கியுள்ளது, வருத்தம் என்னவென்றால், நாட்டின் மகன்களும் மகள்களும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிய தொகையின் சுமையை நினைத்துப் பார்க்கிறார்கள். 

செய்ய வேண்டியவை 

1. வங்கி கல்வி கடன் எண்ணை  மார்க் ஷீட்டில்   ஒட்டப்பட வேண்டும். 

2. சரியான திருப்பிச் செலுத்துதலுக்குப் பிறகு நீக்க வேண்டும். 

3. சிறிய  ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் வங்கிகளால் நிதியளிக்கப்பட வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதிகள் அவசியம் வேண்டும். 

4. நம் நாட்டின் மக்கள் நியாயமான கல்விக்கு தகுதியுள்ளவர்கள் . கல்வி வியாபாரம் அல்ல. 

5. ஆரம்ப நிலைக்குப் பிறகு, மாணவர்களின் ஆர்வத்தை அரசு கவனித்து அவர்களின் சொந்த துறைகளில் வழிநடத்த வேண்டும். 

6. அனைத்து கல்வி பாடத்திட்டங்களும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை வளங்களை அதிகரிப்பதில் புதிய கண்ணோட்டத்துடன் வைத்திருப்பதற்கான மதிப்புகளை பயன்படுத்த வேண்டும். 

நாங்கள் அனைவரும் இந்த மாபெரும் நாட்டின் குடிமக்கள், செய்த வேலையால் மதிக்கப்பட வேண்டும். 

சராசரி என்று எந்த வேலையும் இல்லை. 

உங்களுடைய உண்மையுள்ள, செல்வராஜ் .ஆர் 

ramansel@gmail.com

rajsel_ram@yahoo.com rajsel2003@rediffmail.com



21."யார் அவர்" ? 

எங்கே பிறந்தார் ? எங்கிருந்து வந்தார் ; எதற்காக வந்தார் !? 


ஒன்றும் புரியவில்லை ;அல்லது அதைப் புரிந்து கொள்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை. 


யார் இவர் ? எதற்காக இந்த பிழைப்பு ? ஏன் அலைகிறார் ; அல்லது அலைக் கலைக்கப்படுகிறார். 


விடை இல்லை ; இல்லவே இல்லை ,அதை அறிந்து கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. 


அவர் என்ன ஒருபொருளா? அவர் ஒரு பொருட்டே இல்லை. 


அவர் ஒரு பொருளாக பார்க்கப்பட்டு இருப்பார் – பெண்ணாக, அதுவும் கொஞ்சம் இளமையுடன் கூடிய அழகுடன் இருந்து இருந்தால் என்று தோன்றுகிறது- இரக்கப்படுவதற்கும் அல்லது இறை தேடி அலைவதற்கும். 


50 க்கு மேல் தான் அவரது வயது என்று ஒரு தோராயமான கணிப்பு . கரியநிறம். கிளிந்த சட்டை, லொட லொட பாண்ட் . 


அவரை அவன் என்று யாரும் சொல்லாதற்கு காரணம் அவர் ஒருவிதத்தில் கண்ணியத்துடன் தான் இருக்கிறார் என்று சொல்லவேண்டும். 


யாரும் இங்கே அவரை நாடேடி , அனாதை அல்லது பிச்சைக்காரன் என்று சொல்லாதது வியப்புக்குரியதே ! 


யாரிடமும் யாசிப்பதும் இல்லை , யாசித்தவரைப் பற்றி யோசிப்பது இல்லை இந்த “யாரோவுக்கு” . 


அவர் கண்களில் ஏக்கமோ ; இருக்கமோ காணவில்லை. 


ஒரு நாள் :- 


காலை சுமாராக 6.30 மணி இருக்கும், எல்லோருக்குமாக பகல் விடிந்தது . எங்களுடைய காலனியில் “”நான்கு”” வீடுகள். எல்லோரும் அவர் அவர் தம் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறோம். 


8.30க்குள் எங்களுடைய எல்லா தேவைகளும் முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன். 


ஆம்! அவர் மட்டும் வெளியே இருந்து இரும்பு கதவை திறந்து ஓடிவருகிறார். 


தூய்மை பணியாளர்களுக்கு எடுத்துச் செல்ல Bucket எல்லாம் நிறம்பி வழிகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் எல்லாம் கலந்த கலவை அது. 


அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து எல்லாவற்றையும் வண்டியில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 


ஒரு சில நொடியில் அந்தக் கழிவை ஒரு கை ஏந்துகிறது. அதைப் பிழிகிறது. அந்த ஈரத்தை உறிஞ்சுகிறது. 


எல்லோரும் பார்க்கிறோம். அவர் மேலும் ஒரு Bucket ல் உள்ள மிஞ்சிய நிரை குடிக் கிறார். 

போ! போ! போ! என்று போர் குறல்கள். மழையில் தன் கால் சட்டையை சரி செய்து கொண்டு சத்தம் இல்லாமல் தன் தேவையை பூர்த்தி செய்து கொண்டு தன் வழிசெல்கிறார். 


கூடவே இருந்த எனக்கு ஒன்றும் புரியவில்லை . புரிவதற்கு எனக்கு அனுபவம் இல்லை. 


நானும் ஒருநாள் துறத்தப்படுவேன். அப்போது எனக்கு அவமானம் இருக்காது. மாலைகளும் அழுகைகளும் ஒன்றுசேர்ந்தாலும் அதைப் பொருட்படுத்த என் ஜீவன் அனுமதிக்காது. 


அந்த அனுமதியை இப்போதே நிராகரிக்கும் இந்த “”அவர்”” ஒரு விதத்தில் சித்தரே!!! 


நான் என்கிற 


Raman Selvaraj



22.பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் 

எனது விவகாரங்களுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்காமல் நான் இந்த உலகில் வாழ விரும்பும் ஒரு இயற்கை காதலன். 


“”தற்போது இருப்பது “” :-இன்றியமையாதது என்ற காரணத்திற்காக மட்டுமே நான் இருக்கிறேன். 


இந்த உலகம் இப்போது பேராசையால் சூழப்பட்டுள்ளது . 


பணத்திற்காக ஆபத் பாங்கானாக இருக்கும் மரங்கள் புறக்கணிப்பது எவ்வளது பெரிய கேடு என்பதை போன்ற செய்திகளை வீரியம் மற்றும் உயிர்ச்சக்தியுடன் பரப்ப நான் கூக்குரல் இட விளைகிறேன் . 


நீங்கள் வாழ்க்கையில் மனநிறைவுடன் நிறைந்திருப்பதை நான் காண வேண்டும். 

சரி. நம்மிடம் உள்ளவற்றில் நாம் திருப்தி அடைந்தால் உலக வளர்ச்சியும் மாற்றமும் நின்றுவிடும் என்று சிலர் வாதிடுகின்றனர். 


அதல்ல;எனது கூற்று . மிக எளிதானது. 


சமுதாயத்தில் நாம் மதிப்புமிக்க முறையை ஊக்குவிக்க வேண்டும், அதற்காக நம் முன்னோர்கள் வாழ்ந்த வழியை நாம் படிக்க வேண்டும், மேலும் உலகை “”வாழச் சிறந்த “” ஒரு இடமாக மாற்ற நவீன விஞ்ஞான எண்ணங்களை அவற்றில் நாம் பதித்துச் செல்ல வேண்டும். 


அந்த ஒழுங்கு நடக்க, நாம் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்த வேண்டும். 


எல்லா உயிர்களுக்குமான இந்த உலகில் “செய்யும் தொழிலே” தெய்வம்.எந்த வேலையும் இயற்கையில் அர்த்தமற்றது அல்ல. 


ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை அன்புடனும் இரக்கத்துடனும் இருப்பாள் தாய். 


“இயற்கையும்” நமக்கு மலைகள், ஆறுகள், ஏரிகள், காடுகள், மரங்கள், அவற்றில் விலங்குகள், பூச்சிகள், பறவைகள், ஊர்வன போன்றவற்றை வழங்கி நம்மை பாதுகாக்கிறது. 


இயற்கை சுற்றுச்சூழலைக் கட்டுக்குள் வைத்திருக்க காடுகளை நமக்கு தானமாக அளித்து காக்கிறது. 


இதை ஏழை குடிமக்களோ அல்லது நெட்டிசன்களோ கூட புரிந்து கொள்ளவில்லை. 


நம் பேராசை என்ற சாத்தானுக்காக ஒவ்வொரு இடத்திலும் அழிவுகள், சண்டைகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறோம். 


இப்படி நாம் செய்வதை பழிவாங்கலுடன் மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால், பின்னர் ‘நமது நாளை’ பற்றி கனவு பகடித்தனமானது. 

இயற்கை ஒரு அழிவை கையில் எடுக்கும். 


புரிந்து கொள்வோம். 


மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக அனைத்து நதிகளையும் ஒன்றிணைக்கவும்,இயற்கை வருத்தப்படாமல் இருக்க எல்லாவற்றையும் சிதைக்காமலும் நம்பிக்கையுடன் செயல் பட வேண்டிய தருணம் இது. 


இருப்பு கொள்ளாமல் எழுக !! 


செயல் படுக !!! 


பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் 


23. இந்த கையேடு


படிப்பு என்பது ஒரு கருவி; 


கருவி நம்மை சீர் படுத்த வேண்டும். 


உழைப்பு என்பது உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு இயங்க வேண்டும். 


அங்ஙனம் மனிதம் பிறக்கும்.

Comments

Popular posts from this blog

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

அடங்க மறு ...,,,