தனிமை X தன்னுணர்வு
தனிமை X தன்னுணர்வு தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை. ஒரு கூட்டத்தில் , குடும்ப விழாவில், அலுவலகத்தில் , பள்ளிப் பருவத்தில் என பல வேறு சந்தர்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம் , நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி "அதிகம்" வரும். இதுவே ஒரு சந்நியாசி யின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும். காரணம் ; அவர்தம் தன்னுணர்வு நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே ஒரு மீட்சி, ஒரு அறம், ஒரு முழுமை ; தோன்றுவதை உணரலாம். அதுவே பரிபூரண வாழ்வு; இதைத்தான் "பாகவதம்" கூறுவதாக "ஜெய மோகன்" - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர்- தன் "Magnum opus " என்று அறியப்படும் "வெண்முரசில் " கூறுகிறார். எப்போது உங்கள் தனிமை தன்னிறைவு பெறும். Eg. Mahatma Gandhi, சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார்-Simple Attire - ஒரு கோமணத் துண்டு. ...