Posts

அழியாச் சுடர்கள்

I think you might like this book – "அழியாச் சுடர்கள்" by Selvaraj Raman. Start reading it for free: https://read.amazon.in/kp/kshare?asin=B0CW1JRQ1X&id=3oywvwt3lnhijab3dlty6dy7mm

ஐந்திணை இருநூற்றைம்பது நூல் வெளியீடு - இடம் YMCA. நந்தனம்.

Image
Booksellers and Publishers Association of South India.  BAPASI 2024 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ்.வயிரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது இதில் ‘குமரன் பதிப்பகம்’ எஸ்.வயிரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘நாதம் கீதம்’ எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், ‘லியோ புக்ஸ்’ ஏ.குமரன் பொருளாளராகவும், ‘வனிதா பதிப்பகம்’ பெ.மயில வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), ‘மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை’ வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), ‘முல்லை பதிப்பகம்’ மு.பழநி இணைச் செயலாளராகவும், ‘உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்’ இராம.மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ‘டைகர் புக்ஸ்’ எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நிர்வாகக் குழு (தமிழ்) உறுப்பினர்களா

விழா நாள் - 20-01-2024 சனிக்கிழமை , மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை

Image

ஏழையின் உழைப்பில் இறைவனைக் காணலாம் !!!

பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி , மணத்தக்காளி, பொண்ணாங்கண்ணி, முலைக்கீரை .... முலைக்கீரை, பச்சைக்கீரை, மனத்தக்காளிக் கீரையோ, கீரை, கீரை.... இப்படி சொல்லிக் கொண்டே போகும் ஒரு வயது முதிர்ந்த பெரும் பாட்டியை தினமும் நடைப் பயணத்தில் எதிர்கொள்வது இயல்பாக அழைத்தது. அன்று 7 மணி. திரும்பும் போது அந்த கீரை அம்மாவும் நானும் ஒரு சேர நடந்து வந்தோம். ஒரு 50 அடி சென்ற பின் ஒரு வீட்டின் மதில் சுவரில் தன் கூடையை தாங்கலாக வைத்தார் . இது தான் சமயம் என்று என் விவாதத்தை தொடங்கும் முன் முதியவரிடம் இருந்து 3 கீரை கட்டை ரூ 60 கொடுத்து வாங்கிக் கொண்டேன். பாரம் குறைந்ததா என்று ஆரம்பித்தேன் ? இதில் 15 கிலோவிற்கு மேலே என் முதலாளி ஏற்றி வைத்து இருக்கிறார் !! அங்க , அங்க நின்னு சற்று இளைப்பாறி பின் என் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் ? மாத்தூர் - (இது குடந்தையில் இருந்து 5 கிலோ மீட்டர் இருக்கும்) . அங்கு உள்ள அந்த நிலக்கிழார் தன் வயலில் விளைந்த விளைச்சலை வியாபாரத்திற்காக இந்த பாட்டியிடம் கொடுத்து இருக்கிறார் என்பதை அறிந்தேன். வயது .... அது என்ன ... 60க்கு மேலத்தான் இருக்கும் .  சரி ;

இப்படியும் ஒரு நினைப்பா?

என்ன பேசுவது; எதைப் பற்றி பேசுவது; என்ன பொருளைப் பற்றி பேசுவது - ஒரே குழப்பம் !! சற்று நேரத்தில் நிதானித்துக் கொண்டு எல்லோருக்கும் தெரிந்த ஒரு கருத்தை கேட்ப்பவர்களுக்கு தெரியாதது போல நினைத்து , அவர்களுக்கு ஒரு புது செய்தியாக ஏன் சொல்லக் கூடாது என்று நினைத்தான் அருட்செல்வன். அவனுக்கு அழைப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வந்தது. அந்த நூற்றாண்டு அரங்கில் ஒப்பந்தப் படி வரவிருக்கும் நபர் உடல் நலக்குறைவால் வர முடியவில்லை என்பதால் இவனுக்கு அழைப்பு விடுத்து உடனே தயாராக இருக்கச் சொல்லி விழா ஏற்பாடு செய்பவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் ஒரு முடிவுக்கு வந்தான் அவன். கார் வீட்டுக்கு முன் வந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த அண்ணா நூற்றாண்டு நூல் நிலைய வளாகத்தை அடைந்து விடுவோம். கொடுத்த தலைப்பு - " எதுவாகினும் நான் " அல்லது எந்த ஒரு சமுதாய புரிதலுக்கு உட்பட்ட தலைப்பை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என விழா ஏற்பாட்டாளர்கள் கூறி இருந்தனர். அருள் செல்வன் :- தமிழ் முனைவர் பட்டம். தற்போது "இளைய சமுதாயம் " - தொலைக் காட்சி ஊடகத்தில் " கதை கள தேர்வு" உறுப்பினராகவும் , நிகழ்ச்ச

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம், அளக்க முடியவில்லை; எல்லை இல்லா வாழ்வு; எதற்கு இப்படி அலைகிறது; மனமே பேதம் கொள்ளாதே; உன் குணம் எனக்கு தெரியும். உறவை , நட்பை , பழக்க, வழக்கத்தை , மாண்பை, மதிப்பை, மதி இழக்க செய்ய வல்ல, ஆற்றல் உனக்கு இருக்கிறது. என்ன செய்ய ? பாவி மனிதர்கள் நாங்கள் ! படைக்கப்பட்டோம், வளர்க்கப்பட்டோம், வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம். பார்வை எல்லாம் பறக்கின்றன. நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன். என்ன செய்ய...... இனி என்ன செய்ய முடியும்... என்ன செய்ய வேண்டும்... சொல்- உன்னிடமே கேட்கிறேன். பிறப்பு என்பது ஜனனம். தெரியாமல் நடக்கிறது. இறப்பு என்பது மரணம். தெரிந்தே நடக்கிறது. நடப்பதை நிறுத்த முடியாது. முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம். பிரிவும் இயற்கையே !! வாழ்வும் இயற்கையே!! இறப்பும் இயற்கையே!! இதில் ஏங்க என்ன இருக்கிறது ?? சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது. எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ? சுமப்பது சுவை ; அப்படியானால் எதை சுமப்பது, எதிர் காலத்தையா ? நிகழ் காலத்தையா ? இறந்த காலத்தையா? சொல் மனமே சொல் . என் மனசு எனக்கு தெரியவில்லை. என் இதயம்

இப்படித் தான் இருக்க வேண்டும்

வயது 70 ஐ கடந்து இருக்கும். அடர்ந்த புருவம் .எடுத்து வாறி கட்டிய முடி .சடை போடவில்லை. நல்ல சிவப்பு நிறம். பார்த்தால் ஐரோப்பியர் என்று சொல்லிவிடலாம்.  இடம் : ஐராதீஸ்வரர் கோயில், தாராசுரம். காலை 7.30 மணி சனிக்கிழமை. தனியாக கோயிலில் வலம் வந்து கொண்டு இருந்தார்.  நான் தினமும் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அவர் தெய்வநாயகி அம்மன் உடன் உறை ஐராதீஸ்வரர் சாமி கோயிலுக்குள் நுழைவதைக் கண்டேன்.  ஏதே என்னுள் மனசு தவித்துக் கொண்டு இருந்தது. அது அவரை நோக்கி நடக்க செய்தது . கால்கள் நிடந்தன .அவர் வெளி கோபுரத்தை பார்வையிட்டார்.மிதுவாக நடந்தார் .பிறகு பன்புறம் உள்ள விமானத்தை பார்த்து அதை கமேரவிற்குள் பதிவு பார்த்து ஏற்றுக் கொண்டார். பிறகு ஒவ்வொறு கற்சிற்பத்தை உற்று நோக்கி அங்கேயே 3 நிமிடங்களுக்கு மேல் நின்று பார்த்து, சிலாகித்து, உணர்ந்து, குறிப்புகளை எடுப்பது என்னை பெரிதும் ஆச்சரியதிற்கு உள்ளாக்கியது. அவரிடம் மெதுவாக சென்று என்னை அறிமுகம் படித்துக் கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார்; தன்னை ஒரு ஜெர்மானியர் என்றும் சொன்னார். நான் அவரிடம் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம்